மனநோய் பிரச்சனைகளுக்கு ஏன் காப்பீடு வழங்கங்கூடாது எனவும், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்காக வழிகாட்டுதல்களை நிர்ணயிக்குமாறும், மனநோய்களுக்கு காப்பீட்டை நீட்டிக்குமாறும் மத்திய அரசுக்கும், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பான பொது நல மனுவை விசாரிப்பதற்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனநோய்க்கு காப்பீட்டை நீட்டிக்க வேண்டிய காரணங்களை பட்டியலிடுமாறும் மனுதாரரைக் கேட்டுக்கொண்டு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறது.
இந்த பொது நல மனுவை சமர்ப்பித்த கெளரவ் குமார் பன்சால், சட்டப்பிரிவு 21, மனநலப் பராமரிப்புச் சட்டம் 2017-இல், ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை வழங்கப்பட்டிருந்தாலும், எந்த காப்பீட்டு நிறுவனமும் மனநோய்க்கான காப்பீட்டை நீட்டிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.