முகப்பு /செய்தி /இந்தியா / இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் ஏன் தேசிய விடுமுறையாக இருக்க முடியாது? மம்தா பானர்ஜி கேள்வி

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் ஏன் தேசிய விடுமுறையாக இருக்க முடியாது? மம்தா பானர்ஜி கேள்வி

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் ஏன் தேசிய விடுமுறையாக இருக்க முடியாது? பாஜக அரசு அதை ஏன் திரும்பப் பெற்றது? என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அடுத்த ஆண்டு மே மாதம் மேற்குவங்க மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு பல மாதங்கள் உள்ள போதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரச்சாரக் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்தநிலையில், மேற்குவங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜக குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பா.ஜ.க மதவெறுப்பு அரசியல் நடத்தி வருவதாகவும், இந்தியாவில் மதச்சார்பின்மை இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார். எல்லோருக்கும் உணர்வுகள் உள்ளன என்றும், அதை பாஜக மதிக்க வேண்டும் எனவும் கூறினார்.

முன்னதாக பாஜக ஒரு மோசடி கட்சி என்றும், அரசியலுக்காக எதையும் செய்வார்கள் என்றும் சாடினார். குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை தங்கள் கட்சி எதிர்ப்பதாகவும் கூறினார்.

குடிமக்களின் விதியை பாஜக தீர்மானிக்க முடியாது என்று கூறிய அவர், மக்களே அதனை தீர்மானிக்கட்டும் என்றார். மேற்குவங்கம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, குப்பை போல பொய்களை அள்ளி வீசியதாகவும் மம்தா சாடினார். அமித்ஷா கூறியபடி தொழிற்சாலைகளில் மேற்குவங்கம் பூஜ்ஜியத்தில் இல்லை என்ற மம்தா, நாட்டிலேயே சிறுகுறு தொழிலில் முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: BJP, Mamata banerjee, West bengal, West Bengal Election