• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • நரேந்திர மோடி ஏன் வெற்றியாளர்?

நரேந்திர மோடி ஏன் வெற்றியாளர்?

Narendra modi

Narendra modi

பாஜக தொண்டர்கள் கூட நிச்சயமன்ற தன்மையுடன் காணப்பட்டனர். அப்படிப்பட்ட நேரத்தில் தான் மோடி, ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜகவுக்கு மாறி தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருந்தார்.

 • Share this:
  கடந்த அக்டோபர் 7ம் தேதி அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவராக நரேந்திர மோடி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். குஜராத்தில் உள்ளவர்கள் நரேந்திர மோடி குறித்தும் அவர் குஜராத்தின் மாநிலத்தை வளர்ச்சியினை நோக்கி கொண்டு சென்றதையும் கண்கூடாக பார்த்திருக்க முடியும்.

  1980கள் காலகட்டம் குஜராத் அரசியல் சூழலில் மிகவும் சுவாரஸ்யமான காலகட்டமாக இருந்தது. நிர்வாகத்திறன் இன்றியும், உட்கட்சி பூசல்கள் இருந்த போதிலும் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி மிக செளகர்யமாக ஆட்சியில் இருந்தது. காங்கிரஸை எதிர்த்து ஒரு கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாததாக இருந்தது. பாஜக தொண்டர்கள் கூட நிச்சயமன்ற தன்மையுடன் காணப்பட்டனர்.

  அப்படிப்பட்ட நேரத்தில் தான் மோடி, ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜகவுக்கு மாறி தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருந்தார். அந்த நேரத்தில் அகமதாபாத் மாநகராட்சி தேர்தலுக்கு கட்சியை தயார் செய்யும் சவாலான பணியை நரேந்திர மோடி தனது தோளில் போட்டுக்கொண்டார். அந்த நேரத்தில் கட்சிக்குள் நிர்வாக திறன்மிக்கவர்களை கொண்டுவருவதே மோடியின் முதல் திட்டமாக இருந்தது. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் போன்றோரை அரசியல், நிர்வாக பணிகளின் அவசியத்தை எடுத்துரைத்து கட்சிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடந்தது. மக்களின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே மோடியின் எண்ணமாக இருந்தது.

  ஒரு சொற்பொழிவாளராக சிறந்த பேச்சுத்திறன்மிக்கவராகவும், பிறரை உத்வேகப்படுத்துபவராகவும் மோடி திகழ்ந்தார். எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது, அகமதாபாத்தின் தார்நிதர் பகுதியில் ஒரு கூட்டத்தில் மோடி பேசினார், அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி அரங்கை சிரிக்க வைத்தார். பின்னர் கூட்டத்தை நோக்கி, நாம் நகைச்சுவை பேச்சைதொடர வேண்டுமா அல்லது தேசிய முக்கியத்துவம் கொண்ட விஷயங்கள் குறித்து பேசுவோமா என கேட்டார். அந்தக் கூட்டத்தில் எனக்கு எப்படி தைரியம் வந்தது என்றே தெரியவில்லை, ஆனாலும் ‘இராண்டுமே வேண்டும்’ என கத்தினேன். அதனை கேட்ட மோடி, இல்லை, அப்படி முடியாது என கூறிவிட்டு தேசநலன் சார்ந்த விஷயங்கள், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, ஷா பனோ வழக்கு, பாஜகவின் நிர்வாக கண்ணோட்டம் போன்றவை குறித்து மோடி பேசினார். அவர் பேசிய நேர்த்தி விவரிக்க முடியாதது.

  குஜராத்தை சேராதவர்களுக்கு இது தெரியாது. மோடியின் பேச்சுக்கள் அடங்கிய சிடி கேசட்கள் குஜராத்தில் மிகவும் பிரபலம்.

  1994ம் ஆண்டு அவரின் உத்வேகம் தந்த பேச்சை மறக்க முடியாது. அப்போது தான் லத்தூரில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அகமதாபாத்தின் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் நிவாரண பொருட்களுடன் மிகச் சிறிய தன்னார்வலர்கள் என லத்தூருக்கு புறப்பட தயாரானார்கள். அப்போது மோடி அவர்களிடையே பேசினார். இங்கிருந்து செல்பவர்களின் எண்ணிக்கை பொருட்டல்ல, எண்ணிக்கையைக் காட்டிலும் நிவாரண உதவி அங்கு சென்றடைய வேண்டும் அது தான் பெரிது என்றார். அவரின் பேச்சைக் கேட்ட 50 பேராவது தாங்கள் இப்போதே லத்தூருக்கு புறப்பட வேண்டும் என சூளுரைத்தனர்.

  மோடியின் மனிதநேய பன்பை விவரிக்க இரண்டு சம்பவங்களை கூறுகிறேன். 2000களின் தொடக்க காலம் அது. வரலாற்று ஆய்வாளர் ரிஸ்வன் கத்ரியும் நானும் கேகா சாஸ்திரியின் படைப்புகளை தொகுத்துக் கொண்டிருந்தோம். சாஸ்திரியை நேரில் சந்தித்தோம், அவரின் உடல்நிலை குறித்து எனக்கு கவலை ஏற்பட்டது. அவரை புகைப்படம் எடுத்து முதல்வர் மோடியின் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன். விரைவாகவே சாஸ்திரியின் உடல்நலனை கவனித்துக்கொள்ள அவரின் வீட்டுக்கு ஒரு செவிலியர் அனுப்பி வைக்கப்பட்டார்.

  புத்தக ஆசிரியர் பிரியாகாந்த் பரிக் அவருடைய 100வது புத்தகம் நரேந்திர மோடியின் கையால் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என ஆவலாய் இருந்தார். பின்னர் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கினார். ஆனால் புத்தகத்தை வெளியிடுவதற்காக முதல்வராக இருந்த மோடி, நேராக பரிக்கின் வீட்டுக்கே சென்றார். எழுத்தாளர்கள் வட்டத்தில் மோடியின் செயல் திக்குமுக்காட வைத்துவிட்டது.

  நான் 1998ம் ஆண்டு டெல்லியில் இருந்த சமயம் என்னிடம் மோடி பேசும் போது ஒன்றை கூறினார். அதனை எப்போதும் என்னால் மறக்க முடியாது, அவர் கூறியதாவது, “ உங்கள் தொலைபேசி நாட்குறிப்பில் 5000 எண்கள் இருக்க வேண்டும், நீங்கள் அவர்களை ஒரு முறை சந்தித்திருக்க வேண்டும், அதுவும் முறையான வழியில் இல்லை. நீங்கள் அவர்களை தேவை கருதி ஒரு ஆதாரமாக அல்லாமல் ஒரு அறிமுகம் அல்லது நண்பராக தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார். மனித உறவின் முக்கியத்துவம் குறித்து என்னிடம் மிகச்சாதாரணமாக சொல்லிவிட்டார். இன்றும் அவர் இதனை கடைப்பிடித்துவருவதால் தான் அவர் மிகவும் வெற்றிகரமான நபராக வலம்வருகிறார்.

  ஜபான் பதக் (அகமதாபாத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்)

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Arun
  First published: