Home /News /national /

எல்லா மசூதிகளிலும் சிவலிங்கம் உள்ளதா என தேடிக்கொண்டே இருப்பீர்களா? - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி

எல்லா மசூதிகளிலும் சிவலிங்கம் உள்ளதா என தேடிக்கொண்டே இருப்பீர்களா? - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி

கோப்புப் படம்

கோப்புப் படம்

Mohan Bhagwat - இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்கள் சிந்திப்பதில்லை எனவும் இன்றைய இஸ்லாமியர்களின் முன்னோர்களும் இந்துக்களே என மோகன் பகவத் பேசியுள்ளார்

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்து மற்றும் இஸ்லாமிய தரப்பினர் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இரு தரப்பினரும் தங்கள் பக்க ஆதாரங்கள் மற்றும் நியாங்களை நீதிமன்றம் முன் வைத்து வரும் நிலையில், இந்த கியான்வாபி விவகாரம் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய மோகன் பகவத், "சில இடங்களுக்கு தனி கவனம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டு வருகிறோம். ஆனால் அதை வைத்து நாம் தினம்தோறும் சர்ச்சையை கிளப்புவது தேவையற்ற ஒன்று. கியான்வாபி மீது நம்பிக்கை இருக்கலாம். அதற்காக அனைத்து மசூதிகளிலும் சிவலிங்கம் உள்ளதாக என தேடிக்கொண்டே போவதா என்ன.

    வரலாற்றை நாம் மாற்ற முடியாது. இன்றைய இந்துக்களோ, இஸ்லாமியர்களோ இதை உருவாக்கவில்லை. அது அந்த காலத்தில் நடைபெற்றது. இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்கள் சிந்திப்பதில்லை. இன்றைய இஸ்லாமியர்களின் முன்னோர்களும் இந்துக்களே. எனவே, நாம் நமக்கு இடையே பேச்சு வார்த்தை மூலம் தீர்வை கண்டடைய வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடி தீர்வு காண வேண்டும். நாங்கள் எந்த விதமான வழிபாட்டுக்கும் எதிரானவர்கள் அல்ல. நாம் அனைவரின் புனிதத்தையும் மதிக்கிறோம்" என்றார்.

    இதையும் படிங்க: மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு - மகாராஷ்டிராவில் உஷார் நிலை

    இந்த கியான்வாபி தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 4ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கியான்வாபியை போலவே, தாஜ்மகாலையும் இந்து கோயில் எனக் கோரி ஆய்வு செய்ய வேண்டும் என அலகாபாத் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Hindus and muslims, Mohan Bhagwat, RSS

    அடுத்த செய்தி