ராகுல் காந்தி அமேதி மட்டுமில்லாமல் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது.
எப்போதும் போல, தோல்வி பயத்தால் தான் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று பாஜகவினர் விமர்சிக்கத் தொடங்கினர்.
ஆனால், வரும் தேர்தலில் ராகுல் மட்டும் பாதுகாப்பான தொகுதியைத் தேர்வு செய்துள்ளார் என்று எல்லாம் கூற முடியாது. எனவே, வேறு எந்தக் கட்சி தலைவர்கள் எல்லாம் தேர்தலில் பாதுகாப்பான தொகுதியைத் தேர்வு செய்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

ராகுல் காந்தி
இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதால் அதிகளவில் ராகுல் காந்தி விமர்சிக்கப்படுவதால் இவரிடமிருந்தே ஏன் பாதுகாப்பான தொகுதியைத் தேடுகிறார்கள் என்று பார்க்கலாம்.
வயநாடு காங்கிரஸின் கோட்டை என்று கூறலாம். அங்கு அதிகம் பிரபலம் இல்லாத ஒருவரைத் தேர்தலில் நிறுத்தினாலும் காங்கிரஸ் என்றால் வெற்றிபெற்று விடுவார் என்று கூறப்படுகிறது.
எனவே அமேதியில் வெற்றி பெறவில்லை என்றாலும் ராகுல் இங்கு வெற்றிபெற்று விடுவார். ஆனால் ராகுலுக்கு அமேதியில் வெற்றிபெற்றால் தான் அது சமமான வெற்றியாக இருக்கும். 2009மற்றும் 2014 மக்களவை தேர்தல்களில் அங்குக் காங்கிரஸ் தான் வென்றுள்ளது.

அமித் ஷா
பாஜக தலைவர் அமித் ஷா முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக காந்திநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர்களைத் தவிர வேறு யாரும் வெற்றி பெற்றதேயில்லை.
எனவே இந்தத் தொகுதியில் கண்டிப்பாக அமித் ஷா தோல்வி அடைய மாட்டார். முதல் முறை மக்களவை தேர்தல் போட்டியிடும் அமித் ஷா எளிதாக அங்கு வெற்றி பெறுவர் எனலாம்.

பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி நரேந்திர மோடி போட்டியிட உள்ள வாரணாசி தொகுதியில் 1989-ம் ஆண்டு ஜனதா தல கட்சி தலைவரும், 2004-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.
மற்ற எல்லா தேர்தலின்போது இங்கு வெற்றிபெற்ற கட்சி என்றால் அது பாஜக மட்டுமே. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல் இங்கு தான் மோடி வெற்றியை ருசி பார்த்தார். இந்த முறையும் மோடி அங்கு வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆசாம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது இந்தத் தொகுதியில் அவரது அப்பா வசம் உள்ளது. இஸ்லாமியர்கள், தலித், யாதவாக்கள் என கலவையான வாக்கு வங்கி உள்ள ஒரு தொகுதி ஆசாம்கர்.
இந்த தொகுதியில் 1996-ம் ஆண்டு முதல் சமாஜ்வாடி கட்சி அல்லது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளன. 2009-ம் ஆண்டு மட்டும் இந்தத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

முலாயம் சிங்
மைன்புரி தொகுதியில் 1996-ம் ஆண்டு முதல் சாமாஜ்வாடி கட்சி சார்பில் முலாயம் சிங் தான் வெற்றி பெற்று வருகிறார். பல நேரங்களில் இங்கு எதிர்க்கட்சிகள் இங்கு வேட்புமனுவே தாக்கல் செய்ததில்லை.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது ஒரு கட்சியின் முக்கிய தலைவர் என்றால் அவர் எதிர்பாராத விதமாக தோற்றுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையில் பெரும்பாலும் பாதுகாப்பான ஒரு தொகுதியையே தேர்வு செய்கின்றனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்:
POINTS TABLE:
SCHEDULE TIME TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.