அன்னை சீதாவின் நேபாளத்திலும் ராவண இலங்கையிலும் பெட்ரோல் விலை குறைவாக இருக்கிறதே?- சமாஜ்வாதி எம்.பி.யின் ருசிகர கேள்வி

அன்னை சீதாவின் நேபாளத்திலும் ராவண இலங்கையிலும் பெட்ரோல் விலை குறைவாக இருக்கிறதே?- சமாஜ்வாதி எம்.பி.யின் ருசிகர கேள்வி

மாதிரி படம்

இந்த நாடுகளில் மண்ணெண்ணெய் விலையும் நம் நாட்டு மண்ணெண்ணெய் விலையும் ஒப்பிட்டுப் பாருங்கள் தெரியும். பங்களாதேஷ், நேபாளில் கெரசின் விலை ரூ.57 முதல் 59 வரை உள்ளது. இந்தியாவில் ரூ.32 ஆக இருக்கிறது.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை வைத்தன. 4 மெட்ரோ நகரங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கவிருக்கிறது என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில் சமாஜ்வாதி எம்.பி. விஷாம்பர் பிரசாத் நிஷாத் கேள்வி எழுப்புகையில் ராமரின் இந்தியாவை விட சீதாதேவியின் நேபாளத்திலும் ராவண இலங்கையிலும் பெட்ரோல் விலை குறைவாக உள்ளதே என்றி படு கிண்டலாக ருசிகரக் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

    இந்தக் கேள்வி சமூக வலைத்தளங்களில் வைரலானது. கொஞ்ச காலமாகவே இந்தியாவின் பெட்ரோல் விலைகளை பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போக்கு சமூக ஊடகங்களில் காணப்படுகிறது.

    இந்நிலையில் சமாஜ்வாதி எம்.பி. விஷாம்பர் பிரசாத் நிஷாத், “பெட்ரோல் விலை அன்னை சீதாதேவியின் நேபாளத்தில் குறைவாக இருக்கிறது, ராவண இலங்கையில் குறைவாக இருக்கிறது. ராமர் இந்தியாவில் எப்போது பெட்ரோல் விலை குறையும்?” என்று கேள்வி எழுப்பினார்.

    பாஜக எதற்கெடுத்தாலும் ராமாயணத்தை மேற்கோள் காட்டிப் பேசுவதையும் சுட்டிக்காட்டும் விதமாக அவர் எழுப்பிய கேள்வி அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

    இதற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதில் அளிக்கும் போது, இவ்வாறு அண்டை நாடுகளுடன் பெட்ரோல், டீசல் விலையை ஒப்பிடுவது சரியாகாது, அந்நாட்டு மக்கள் தொகை குறைவு, நுகர்வும் குறைவு. நாம் நம்மை பெரிய பொருளாதாரத்துடன் ஒப்பிடுவதா அல்லது சிறிய பொருளாதாரங்களுடன் ஒப்பிட்டுக் கொள்வதா? பெரிய அளவில் நுகரப்படும் பொருட்களின் விலை இந்த நாடுகளில் அதிகம்.

    இந்த நாடுகளில் மண்ணெண்ணெய் விலையும் நம் நாட்டு மண்ணெண்ணெய் விலையும் ஒப்பிட்டுப் பாருங்கள் தெரியும். பங்களாதேஷ், நேபாளில் கெரசின் விலை ரூ.57 முதல் 59 வரை உள்ளது. இந்தியாவில் ரூ.32 ஆக இருக்கிறது.

    கடந்த 300 நாட்களில் 60 நாட்கள் விலை ஏற்றப்பட்டுள்ளது. 7 நாட்கள் பெட்ரோல் விலை, 21 நாட்கள் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. 250 நாட்களுக்கு விலைகளில் மாற்றமில்லாமல் இருந்துள்ளது. எனவே அனைத்துகால அதிக விலை என்று பிரச்சாரிப்பது தவறு, என்று விளக்கம் அளித்தார்.

    பொதுவாக நுகர்வு குறைவாக இருக்கும் நாடுகளில் வருவாயை அதிகரிக்க பெட்ரோல் டீசல் விலைகள் அதிகமாக இருக்கும், நுகர்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகளில் அதிக நுகர்வு காரணமாக விலைகள் குறைவாக இருக்க வேண்டும் இதுதான் பொருளாதார நியதி. ஆனால் மத்திய அமைச்சரோ நுகர்வு அதிகம் என்பதால் விலையும் அதிகம் என்று கூறுகிறார்.
    Published by:Muthukumar
    First published: