Home /News /national /

இலவசங்கள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டாதது ஏன்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

இலவசங்கள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டாதது ஏன்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இலவசங்கள் தொடர்பான வழக்கை இனி நீதிபதி சந்தரசூட் தலைமையிலான மூன்று பேர் அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    தேர்தல் வாக்குறுதிகளாக இலவச திட்டங்கள் அறிவிப்பது தொடர்பான விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு ஏன் கூட்டவில்லை என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    தேர்தல் காலத்தின் போது அரசியல் கட்சிகள் இலவசங்கள், திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில்  பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், ‘ நாட்டைப் பொருத்தவரை அரசியல் கட்சிகள் தான் வாக்குறுதிகள் கொடுத்து தேர்தலில் போட்டியிட்ட வெற்று பெறுகின்றன. தனி நபர் இல்ல. ஒரு வேளை நான் தேர்தலில் போட்டியிட்டால் 10 வாக்குகள் கூட பெற மாட்டேன். தனி நபருக்கு இங்கு முக்கியம் இல்லை. இது தான் நமது ஜனநாயகம். இது தொடர்பாக அரசு குழு அமைத்தாலும் யார் அதற்கு தலைமை தாங்குவது என்ற கேள்வி எழும்.

    இதையும் படிங்க: பிரபலமான கல்வி நிலையங்களின் சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை.. டெல்லியில் 6 பேர் கைது

    எனவே, அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் ஆலோசிப்பது அவசியம்.நாங்கள் அரசின் கொள்கைகளுக்கோ, திட்டங்களுக்கோ எதிரானவர்கள் அல்ல  மேலும், இந்த வழக்கை இனி நீதிபதி சந்தரசூட் தலைமையிலான மூன்று பேர் அமர்வு விசாரிக்கும்’  என என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

    முன்னதாக நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் திமுக தரப்பில் வழக்கறிஞர் வில்சன் ஆஜரான போது, இலவசங்கள் குறித்து திமுக அமைச்சர்கள் அளித்த பேட்டியை பார்த்ததாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி ரமணா, திமுக மட்டுமே அறிவார்ந்த கட்சி என எண்ண வேண்டாம் எனவும் கூறினார். மேலும் அவர், எது இலவசம், எது பொதுநலன் என்பதை ஆராய வேண்டும். இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: All Party Meeting, Supreme court

    அடுத்த செய்தி