முகப்பு /செய்தி /இந்தியா / ''திமுக கூட்டணி.. நேரு பெயர்.. தாமரை மலரும்'' - நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி!

''திமுக கூட்டணி.. நேரு பெயர்.. தாமரை மலரும்'' - நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி உரை

எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரி வீசினாலும் தாமரை மலர்ந்தே தீரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடனே கூட்டணி வைத்துள்ளதாக திமுகவை மோடி விமர்சித்தார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் மோடி புதன்கிழமை பதில் அளித்தார். இதனை தொடர்ந்து வியாழக்கிழமை மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதானியும் பிரதமர் மோடியும் சகோதரர்கள் என்று கூறி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர்.

எதிர்கட்சிகளின் அமளியை பொருட்படுத்தாமல் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா தற்போது சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் தாங்கள் நிரந்தர தீர்வு காண முயல்வதாக கூறினார். அதிமுக்கியம் வாய்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு காங்கிரஸ் தீர்வு கண்டதில்லை என்று குற்றம்சாட்டிய பிரதமர், அக்கட்சியின் கணக்கை பாஜக மூடிவிட்டதாக கூறினார். எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரி வீசினாலும் தாமரை மலர்ந்தே தீரும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

எண்ணற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, மக்களின் நலனுக்காகவே தாங்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். கொரோனா மருந்தை இந்திய விஞ்ஞானிகள் தயாரித்தது குறித்து பெருமிதம் தெரிவித்த மோடி, ஆனால் சொந்த நாட்டு விஞ்ஞானிகளையே எதிர்க்கட்சியினர் விமர்சித்தாக குற்றம்சாட்டினார். அரசியல் சாசன பிரிவு 356- யை பயன்படுத்தி, எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி போன்ற பெரிய தலைவர்களின் ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் உடன் கைகோர்த்துள்ளீர்கள் என திமுகவை பிரதமர் மோடி விமர்சித்தார்

அரசியல் சாசன பிரிவு 356- யை பயன்படுத்தி மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, 50 முறை மாநில அரசுகளை கலைத்ததாகவும் மோடி கூறினார். இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, சிறந்த மனிதர் என்றால் அவரின் குடும்ப பெயரை ஏன் வைத்துக்கொள்ளவில்லை என்றும் அவரின் பெயரை பயன்படுத்தவதில் என்ன வெட்கம் என்றும் கேள்வி எழுப்பினார். தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்கவில்லை என்று விமர்சித்த பிரதமர் மோடி, இந்திய மக்கள் அவர்களை தொடர்ந்து நிராகரிப்பதாக கூறினார். ஒருவரை பலர் ஒன்று சேர்ந்த எதிர்ப்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருப்பதாக கூறிய மோடி, தான் நாட்டுக்காவே வாழ்கிறேன் என தெரிவித்தார்.

பாஜக ஆட்சியில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியப்பட்டதாகவும், வங்கி கணக்கு தொடங்குதல், குடிநீர் குழாய் இணைப்பு, சிலிண்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றில் நாட்டு மக்கள் அடைந்த வளர்ச்சி மற்றும் பயன் குறித்து பிரதமர் மோடி பட்டியலிட்டார். பிரதமர் மோடியின் பதில் திருப்தியளிக்கவில்லை என கூறி மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

First published:

Tags: Congress, Jawaharlal Nehru, PM Narendra Modi, Rahul gandhi