வாக்களிக்கும் போது ஊதா நிற மை ஏன் வைக்கப்படுகிறது தெரியுமா ?

மாதிரிப்படம்

கர்நாடகாவில் தயாராகும் இந்த மையை இந்தியா மட்டுமல்லாது கனடா, கம்போடியா, மாலத்தீவுகள், நேபாளம், தென்னாபிரிக்கா மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் பயன்படுத்துகின்றன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஒரு இந்தியனாக , நாட்டின் குடிமகனாக நான் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன் என பெருமையாக சொல்லிக் கொள்ள சாட்சி இடது கை பெருவிரலில் உள்ள மை. என்னதான் தலைகீழ் நின்று கழுவினாலும் அந்த மையை உடனடியாக அழிக்க முடியாது. ஏன் அழிக்க முடியாது , ஏன் வைக்கப்படுகிறது என்பது தெரியுமா ?

  1962 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில்தான் முதன்முதலில் மை அறிமுகப்பட்டது. அப்போது அடையாள அட்டைகள் அனைவரிடமும் இல்லாததால் வாக்களித்த ஒருவர் மீண்டும் வாக்களிக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கவே இந்த மை வைக்கப்பட்டது.

  தற்போது வாக்களார் அட்டை வழங்கியும் கள்ள ஓட்டு மோசடிகள் நடைபெறுவதால் இன்றும் மை வைக்கும் விதிமுறை பின்பற்றப்படுகிறது.

  இதற்கு முன், இடது கையின் ஆள்காட்டி விரலில் நகமும் சதையும் சேரும் இடத்தில் மை வைக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு முதல்தான் கோடு போல் நகத்திலிருந்து விரல் வரை நீட்டி வைக்கப்பட்டது.  எம்.எல். கோயல் என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுதான் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நீல நிற மையை கண்டுபிடித்தது.

  கர்நாடகாவில் உள்ள ” மைசூர் பெயிட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் “ எனும் மாநில அரசு நிறுவனம்தான் இதற்கான மையை தயாரிக்கிறது.

  இந்த மையில் சில்வர் நைட்ரேட் என்ற ரசாயணம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கையில் வைக்கும்போது புற ஊதா வெளிச்சம் படும்போது அதன் அடர்த்தி 7 முதல் 25 சதவீதம் மாறுகிறது. மை தோலின் செல்களில் கலந்துவிடுகிறது. இதனால்தான் அதை அழிக்க முடியவில்லை.

  அந்த மையானது குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அடர்த்தியான ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது. பின் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கிறது.

  கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் புதிய செல்கள் உற்பத்தியாவதால் பின்னர் மை முற்றிலுமாக மறைந்துவிடுகிறது.

  கர்நாடகாவில் தயாராகும் இந்த மையை இந்தியா மட்டுமல்லாது கனடா, கம்போடியா, மாலத்தீவுகள், நேபாளம், தென்னாபிரிக்கா மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் பயன்படுத்துகின்றன.

  Also Read :  கோடை விடுமுறையில் குழந்தைகளை எந்தப் பயிற்சிகளுக்கு அனுப்பலாம்?   
  Published by:Sivaranjani E
  First published: