ஹோம் /நியூஸ் /இந்தியா /

பவானிபூர் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள்? - கொல்கத்தா உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

பவானிபூர் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள்? - கொல்கத்தா உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

வேறு ஒருவர் மீண்டும் வெற்றி பெறவேண்டுமென்பதற்காக ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள்? வரி செலுத்துபவர்களின் பணத்தை இந்தத் தேர்தலுக்கு ஏன் செலவிட வேண்டும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மேற்குவங்க சட்டமன்ற இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள்? வரி செலுத்துபவர்களின் பணத்தை இந்தத் தேர்தலுக்கு ஏன் செலவிட வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

மேற்குவங்க சட்டமன்றத்துக்கான தேர்தல் இந்த ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை 8 கட்டங்களாக நடத்தப்பட்டு முடிவுகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 292 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் பெருவாரியான வெற்றி பெற்றது. இருப்பினும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளரான மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி தந்தார். சுவேந்து அதிகாரியிடம் போட்டி போட வேண்டுமென்பதற்காக மம்தா தான், வழக்கமாக போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் போட்டியிடாமல் தொகுதி மாறி போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இருப்பினும், மம்தா பானர்ஜிக்கு வழிவிடும் வகையில் பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சோபந்தேப் சட்டோபாத்யா, கடந்த மே 21ம்தேதி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா வெற்றி பெற்றால் தான் முதல்வராக தொடர முடியும். அரசியலைமைப்பு சட்டப்படி 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏவாக இல்லாதவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது அவசியம் ஆகும்.

Also Read:  வழிப்பறியில் ஈடுபட்டு வந்த முன்னாள் தேசிய சாம்பியன் கைது!

இந்நிலையில் பவானிபூர் உட்பட மேற்குவங்கத்தில் காலியாக இருக்கும் 3 தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று, அக்டோபர் 2ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக மம்தாவும், பாஜக சார்பில் இளம் மகளிர் தலைவியான பிரியங்கா திப்ரேவாலும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிராக கொல்கததா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, திட்டமிட்டபடி செப் 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

Also Read:  காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கண்ணையா குமார் – யார் இவர்கள்?

இந்த வழக்கின் விசாரணையின் போது பேசிய நீதிபதிகள், மேற்குவங்க தலைமைச் செயலாளர் பவானிபூர் தொகுதியில் தேர்தல் நடத்தாவிட்டால் அரசியலமைப்பு நெருக்கடி என கூறியதன் பேரில், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த வேண்டும் என கூறுகிறது. சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு பின்னர் சில காரணங்களுக்காக ராஜினாமா செய்கின்றனர்.

இப்போது வேறு ஒருவர் மீண்டும் வெற்றி பெறவேண்டுமென்பதற்காக ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள்? வரி செலுத்துபவர்களின் பணத்தை இந்தத் தேர்தலுக்கு ஏன் செலவிட வேண்டும் என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

Published by:Arun
First published:

Tags: Kolkata, Mamata banerjee