ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி விற்கப்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் வேதனை

இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி விற்கப்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் வேதனை

கோவிஷீல்டு(மாதிரிப் படம்)

கோவிஷீல்டு(மாதிரிப் படம்)

இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் போலி கோவிஷீல்டு தடுப்பு மருந்து விற்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பிரதான கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டின் போலிகளை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் போடப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகளில் சில போலியானவை என தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டியுட் இதனை உறுதிப்படுத்தியதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு போலி மருந்துகள் மனித உயிருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

  இந்தியாவில் 2 மில்லி லிட்டர்,அதாவது நான்கு டோஸ்கள் கொண்ட கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் போலிகள் என கண்டறியப்பட்டுள்ளன. கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டியுட், 2 மில்லி லிட்டர் கொண்ட குப்பிகளை உற்பத்தி செய்வதில்லை என கூறியுள்ளது.இதேபோல் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவிலும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி காலாவதி என குறிப்பிட்டுள்ள தடுப்பு மருந்துகள் போலியானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

  போலி கோவிஷீல்டு மருந்துகளை கண்டுபிடித்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.போலி மருந்துகள் குறித்து மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும் சுகாதார அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டன் நாட்டின் ஆஸ்ட்ராஜெனகா மருந்தே இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தியாவில், கொரோனா தொற்றுக்கு கோவிஷீல்ட் மருந்தே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 48 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆசிய, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு கோவிஷீல்ட் தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கோவேக்ஸ் திட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தடுப்பூசி கொள்கையின் கீழும் ஏழை நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Corona Vaccine, Covishield, News On Instagram