ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளை தனியே காட்டிய வரைபடம்: உலகச் சுகாதார அமைப்பு மீது இந்தியா கடும் அதிருப்தி

உலக சுகாதார மையம் (கோப்புப்படம்)

இந்த விவகாரம் தொடர்பாக ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த உலகச் சுகாதார அமைப்பு, ஐ.நாவின் வழிகாட்டுதல்களின் படிதான் வரைபடங்களை வெளியிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

 • Share this:
  உலக சுகாதார அமைப்பின் இணைய பக்கங்களில் இருக்கும் இந்திய வரைபடத்தில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் தனியாக காட்டப்பட்டுள்ளதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா.-விற்கான இந்திய பிரதிநிதி இந்திராமணி பாண்டே காரசாரமான ஒரு கடிதம் எழுதியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோமிற்கு எழுதியுள்ள அக்கடிதத்தில் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

  அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

  “உலக சுகாதார அமைப்பின் இணையதளங்களில் இந்தியாவின் எல்லைகளை தவறாக சித்தரித்து வரைபடம் உள்ளது. இயக்குனர் என்ற முறையில் உடனடியாக தலையிட்டு அவ்வரைபடங்களை நீக்க வேண்டும். சரியான வரைபடங்களை மாற்றியமைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

  முன்னதாக இந்திய தூதரகம் இது தொடர்பாக இரண்டும் கடிதம் அனுப்பியுள்ளதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

  வரைபட விவகாரம் பிரச்சனையான பின் எழுதப்படும் 3வது கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 30ம் தேதி ஒரு கடிதமும் ஜன.3ம் தேதி ஒரு கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

  இந்த விவகாரம் தொடர்பாக ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த உலகச் சுகாதார அமைப்பு, ஐ.நாவின் வழிகாட்டுதல்களின் படிதான் வரைபடங்களை வெளியிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: