ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், சீரம் இந்தியா நிறுவனமும் இணைந்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் கோவிஷீல்டு தடுப்பூசி போலியாக மக்களுக்கு அளிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உகாண்டாவில் கண்டறியப்பட்ட போலியான கோவிஷீல்டு மருந்தின் குறிப்பிட்ட ஒரு பேட்ஜ் எண்ணும் வெளியாகியுள்ளது.
சீரம் இந்தியா தயாரித்து வரும் கோவிஷீல்டு தடுப்பூசிகளில் 2 ML அளவு குப்பிகளே இல்லாத நிலையில். 2 ML குப்பிகள் சந்தையில் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த வகை போலி கோவிஷீல்டு மருந்துகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் காணப்பட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
Also Read : கருவை கலைக்க பெண்களுக்கு உரிமையுண்டு: கேரள உயர் நீதிமன்றம்!
தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவில் போலி கோவிஷீல்டு மருந்துகள் விற்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி சீரம் நிறுவனத்துக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது போலி கோவிஷீல்டு மருந்து அதிகரித்தால் உலகளாவிய சுகாதார கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
அதேநேரம், போலி கோவிஷீல்டு குறித்து தங்களுக்கும் புகார்கள் வந்துள்ளதாக சீரம் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் போலி கோவிஷீல்டு மருந்து குறித்து மத்திய அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.