Home /News /national /

அமைச்சரான அமித் ஷா... பாஜகவின் அடுத்த தலைவர் யார்...?

அமைச்சரான அமித் ஷா... பாஜகவின் அடுத்த தலைவர் யார்...?

மோடி, அமித் ஷா

மோடி, அமித் ஷா

பாஜகவின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாடாளுமன்ற குழுவில் ஜே.பி.நட்டா இருப்பதால், அவர் தலைவராக தேர்வாக வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பாஜகவின் தலைவராக இருந்த அமித்ஷா அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால், அக்கட்சியின் தலைவராக அடுத்து யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. பிரதமர் மோடி நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    பாஜகவின் தலைவராக இருக்கும் அமித்ஷா, கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவர் நிதி அமைச்சராக நியமிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவின் தலைவராக அமித் ஷா தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சியில் தலைவர் பதவிக்காலம் 2 ஆண்டுகள் என்பதால், 2016-ல் மீண்டும் அவர் தலைவராக தேர்வானார்.

    எனினும், 2018-ல் பதவிக்காலம் முடிந்தாலும் தேர்தல் வர இருந்ததால், தலைவர் பதவியில் அமித்ஷா நீட்டிக்கப்பட்டார்.

    தற்போது, அவர் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால், ஒருவருக்கு ஒரு பதவி என்ற பாஜகவின் கொள்கையின் அடிப்படையில், அமித் ஷா தலைவராக நீடிக்க முடியாது.

    மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக ஜே.பி நட்டாவுக்கு தற்போது பதவி வழங்கப்படவில்லை.

    பாஜகவின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாடாளுமன்ற குழுவில் ஜே.பி.நட்டா இருப்பதால், அவர் தலைவராக தேர்வாக வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

    தற்போது துணை தலைவராக உள்ள ஓ.பி. மாத்தூர் உள்ளிட்ட சில மூத்த தலைவர்களின் பெயர்களும் அடிபடுகின்றன. இன்னும், சில தினங்களில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளது.

    Published by:Sankar
    First published:

    Tags: BJP

    அடுத்த செய்தி