ஹோம் /நியூஸ் /இந்தியா /

52 வழக்குகளில் தொடர்புடைய கேங்க்ஸ்டர் எம்.எல்.ஏ.. 150 காவலர்கள் புடைசூழ பஞ்சாபிலிருந்து உ.பி சிறைக்கு மாற்றம்!

52 வழக்குகளில் தொடர்புடைய கேங்க்ஸ்டர் எம்.எல்.ஏ.. 150 காவலர்கள் புடைசூழ பஞ்சாபிலிருந்து உ.பி சிறைக்கு மாற்றம்!

முக்தர் அன்சாரி:

முக்தர் அன்சாரி:

உத்தரப்பிரதேசத்தில் கேங்க்ஸ்டராக இருந்து எம்.எல்.ஏவாக மாறியவர் மீது  52 குற்ற வழக்குகள் உள்ளதால் உச்சநீதிமன்ற ஆணைப்படி 150 போலீசார் புடை சூழ பஞ்சாப் சிறையிலிருந்து கடுமையான பாதுகாப்புடன் உத்தரப்பிரதேச சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முக்தர் அன்சாரி:  உத்தரப்பிரதேச மாநிலம், மாவ் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வரும் இவர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். மாவ் தொகுதியில் 1996ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தொடர்ந்து 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக இருந்து வரும் இவர் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்.

முக்தர் அன்சாரியின் தாத்தா டாக்டர்.முக்தர் அகமது அன்சாரி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1927–28 காலகட்டத்தில் இருந்தவர். இவருடைய மற்றொரு தாத்தா பிரிகேடியர் முகமது உஸ்மான் அன்சாரி ‘நவ்ஷேராவின் சிங்கம்’ என புகழப்படுபவர். அவர் மகாவீர் சக்ரா விருதும் பெற்றுள்ளார். மேலும் முக்தர் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் வீரராக இருந்து வருகிறார். இவர் சர்வதேச அளவில் வெற்றிகளை குவித்து பதக்கங்களை குவித்துள்ளார். முக்தர் அன்சாரி தற்போது மாவ் தொகுதியின் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இவர் மீது 52 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருப்பினும் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பஞ்சாபின் ரூப்நகர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். எம்.எல்.ஏ முக்தர் அன்சாரி தொடர்புடைய வழக்குகளில் மட்டும் இதுவரை 96 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 192 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள்/சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் இருந்து 26 முறை சம்மன் அனுப்பியும் உடல்நிலையை காரணம் காட்டி முக்தர் அன்சாரி ஆஜராவதில் இருந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு உத்தரப்பிரதேச காவல்துறையினரிடம் அவரை ஒப்படைக்க பஞ்சாப் காவல்துறைக்கு உத்தரவு கிடைத்துள்ளது. முக்தர் அன்சாரியை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பந்தா சிறைக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உத்தரப்பிரதேசத்தில் இருந்து 150 காவலர்கள், ஆயுதங்களுடன் கூடிய சிறப்பு ஆயுதப் படையினர் வஜ்ரா வாகனம் என தடபுடலாக ஒரு பெரும் படை பஞ்சாபில் உள்ள ரூப்நகர் சிறைக்கு புறப்பட்டு சென்றனர். அன்சாரிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை வீல் சேரில் வைத்து போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர். பஞ்சாபிலிருந்து பெரும் போலீஸ் படையுடன் அவர் ஆம்புலன்ஸில் உத்தரப்பிரதேசத்துக்கு பயணமாகி கொண்டிருக்கிறார்.

Published by:Arun
First published:

Tags: BSP, Crime | குற்றச் செய்திகள், Gangster, Uttar pradesh