முகப்பு /செய்தி /இந்தியா / சத்தீஷ்கரில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர தாக்குதல்களின் மூளை யார்?

சத்தீஷ்கரில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர தாக்குதல்களின் மூளை யார்?

மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா

மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா

சத்தீஷ்கரில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு, மூளையாக செயல்பட்டது மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா என்பது தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் அந்த நபர் யார்?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா-பிஜாபூர் எல்லையில் உள்ள வனப்பகுதியில், நீண்ட காலமாக தேடப்படும் மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா தலைமறைவாக இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு தேடுதல் வேட்டை நடத்தியபோது, திடீரென மாவோயிஸ்ட் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 22 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 31 வீரர்கள் காயமடைந்தனர்.

இந்த மொத்த தாக்குதலுக்கும் காரணமான ஹிட்மா,  உறுப்பினர்களை கொண்ட நக்சல் அமைப்பின் மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள, மிக இளம் வயது தலைவர் என கூறப்படுகிறது. மேலும், அந்த அமைப்பின் மத்திய ஆயுதக்குழு ஆணையத்தின் தலைவராகவும், அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் புவர்த்தி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான ஹிட்மா, 90 களில் மாவோயிஸ்டுகளுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.  தனது 25வது வயதிலேயே, பஸ்தர் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக நடந்த பல முக்கிய தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

தொடர்ந்து, தந்த்வாடா, ஜீரம் வாலே, சுக்மா ஆகிய பகுதிகளில் அவர் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், அரசியல் தலைவர்களுடன் நூற்றுக் கணக்கான பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க... சத்தீஸ்கரில் நடந்த துப்பாக்கிச்சண்டை.. நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் அமித்ஷா

மிகவும் கொடூரமான தாக்குதல்களுக்கு பெயர் பெற்ற ஹிட்மா தலைமையின் கீழ், தற்போது 250 பேரை கொண்ட நன்கு பயிற்சி பெற்ற கொரில்லா படைப்பிரிவு செயல்படுகிறது. இவர் தொடர்பான தகவல் அளிப்பவருக்கு 40 லட்ச ருபாய் பரிசுத் தொகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹிட்மா மீண்டும் ஒரு கொடூர தாக்குதலுக்கு திட்டமிட்டு உள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Chhattisgarh, Maoist, Naxal Attack