• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மோடியின் புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு?

மோடியின் புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு?

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

இன்று 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், அவருடன் 65 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நரேந்திரமோடியின் புதிய அமைச்சரவையில் அதிமுவில் வைத்திலிங்கம் அல்லது ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோன்று மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் பியுஷ் கோயல் உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில், பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. புதிய அமைச்சர்கள் பட்டியலை தயார்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பில் அமைச்சரவையில் யார் யாரை சேர்ப்பது, ஏற்கனவே அமைச்சர்களாக உள்ளவர்களில் யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

புதிய அமைச்சரவையில் அனுபவம் பெற்ற மூத்தத் தலைவர்களை தவிர இம்முறை பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகிய மூத்த தலைவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.

பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்த தேசிய தலைவர் அமித் ஷா இம்முறை அமைச்சரவையில் இடம்பெறுவார். கூட்டணி கட்சிகளை பொருத்தவரை, சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 அமைச்சர் பதவிகளும், லோக் ஜன்சக்தி, சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் ஒதுக்க வாய்ப்புள்ளது.

அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் மற்றும் லோக் ஜன்சக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வானுக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

தமிழகத்தை பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து, தேனி மக்களவை தொகுதியில் இருந்து தேர்வாகியுள்ள ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமாருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.

இதேபோல், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான வைத்திலிங்கம், அமைச்சரவையில் இடம்பெற முயற்சித்து வருகிறார்.

அதேபோல், மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானாவில், பாஜக அழுத்தமாக கால்பதித்ததை அடுத்து, அங்குள்ளவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் எனவும் கருதப்படுகிறது.

இன்று 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், அவருடன் 65 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Also see... 

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: