Home /News /national /

'மது குடிப்பவர்கள் இந்தியர்களே கிடையாது; அவர்கள் மகா அயோக்கியர்கள்' - நிதிஷ் குமார் கடும் தாக்கு

'மது குடிப்பவர்கள் இந்தியர்களே கிடையாது; அவர்கள் மகா அயோக்கியர்கள்' - நிதிஷ் குமார் கடும் தாக்கு

மது குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே, மக்கள் மது குடிக்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசு பொறுப்பேற்காது

    மது குடிப்பவர்கள் இந்தியர்களே கிடையாது என்றும் அவர்கள் மகா அயோக்கியர்கள் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விமர்சித்துள்ளார்.

    நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சி ஆட்சி செய்யும் பீகார் மாநிலத்திற்கு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மது பிரியர்கள் கள்ளச்சந்தையில் மதுவை பெறுவதாகவும், இந்த கள்ளச் சாராயத்தால் உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், பீகார் சட்டமன்றத்தில் மது தடை மற்றும் கலால் திருத்த மசோதா 2022-யை முதல்வர் நிதிஷ் குமார் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா, மது தடை சட்டதை மீறுபவர்கள் முதன்முறையாக குற்றத்தை செய்திருந்தால் அவர்கள் அபராதத்தை செலுத்தி ஜாமீனை பெற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வழி வகை செய்கிறது.

    இதையும் படிங்க -  NaMo செயலி மூலம், மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிப்பேன்: பிரதமர் மோடி

    மசோதாவை தாக்கல் செய்து நிதிஷ் குமார் பேசுகையில், 'மது குடிப்பவர்களை நான் இந்தியர்களாக கருதுவது கிடையாது. அவர்கள் மகா பாவிகள் அல்லது மகா அயோக்கியர்கள். மது குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே, மக்கள் மது குடிக்கின்றனர். மது குடிப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்கள்தான் பொறுப்பு ஆவார்கள். இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க முடியாது.' என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க - நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன.. ஒன்றை மட்டும் நீட்டித்துள்ளது மத்திய அரசு

    இதற்கு ஆட்சேபம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, 'மது விலக்கை பீகார் அரசு சரியான முறையில் நிறைவேற்றவில்லை. இதனால் கள்ளச்சாராயம் பெருகியுள்ளது' என்று குற்றம் சாட்டினர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Bihar

    அடுத்த செய்தி