ஹோம் /நியூஸ் /இந்தியா /

முற்பட்ட வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தீர்ப்பு: யாரெல்லாம் பயன்பெறுவார்கள்?

முற்பட்ட வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தீர்ப்பு: யாரெல்லாம் பயன்பெறுவார்கள்?

 கோப்பு படம்

கோப்பு படம்

ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இதற்கு யாரெல்லாம் தகுதி உடையவர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கீழ்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் அவர்கள் 10% இடஒதுக்கீடுக்கு தகுதி உடையவராக கருதப்படுவார்.

  குடுப்பத்தினர் என்பது இடஒதுக்கீடு கோருபவர், அவர் பெற்றோர், 18 குறைவாக உள்ள அவரது சகோதர, சகோதரிகள், மனைவி மற்றும் குழந்தைகள் ஆகும்.

  எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவில் இல்லாதவர்கள் அதாவது பொதுப்பிரிவில் வருபவர்களாக இருக்க வேண்டும்.
  ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  5 ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும்
  வீடு (ஃபிளாட்) 1000 சதுர அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்
  குறிப்பிட்ட நகராட்சிகளில் 100 சதுர அடிக்கு மேல் வீடு கட்டும் நிலம் இருக்க கூடாது.
  மற்ற இடங்களில் 200 சதுர அடிக்கு மேல் வீடு கட்டும் நிலம் இருக்க கூடாது.
  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Reservation, Supreme court