• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வெள்ளை காக்கா பறக்குது... ஆச்சரியத்தில் மக்கள்!

வெள்ளை காக்கா பறக்குது... ஆச்சரியத்தில் மக்கள்!

வெள்ளை காகம்

வெள்ளை காகம்

ஒருநாள் காலை உணவை உண்ண வெள்ளை காகம் காத்திருப்பதை பார்த்தேன். மற்ற பறவைகளில் இருந்து அந்த காகம் தனித்து இருந்தது என்று அவர் கூறினார்.

  • Share this:
    குஜராத் மாநிலத்தில் வெள்ளை காகம் தென்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

    கிராமபுறங்களில் ‘வெள்ளை காக்கா மல்லாக்க போகுது’ என்று சொல்வது உண்டு.  வெள்ளை காக்கா என்ற ஒன்று இல்லை என பொருள்படுவது இந்த வாக்கியம். ஆனால், வெள்ளை காக்கா உண்டு என்பதுதான் அறிவியல் பூர்வமான உண்மை. வெளிநாடுகளில் மட்டுமல்லாது நமது தமிழகத்திலேயே ஒருசில இடங்களில் வெள்ளை காக்கா தென்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது.

    இது போன்ற ஒரு சம்பவம்தான் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.  குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தின் தஹேகாம் தாலுகாவில் உள்ள தரிசனா கிராமத்தைச் சேர்ந்த தரிசனா சர்பஞ்ச் ஷைலேஷ் படேல் என்பவர் 20 தினங்களுக்கு முன்பு அபூர்வ பறவை ஒன்றை பார்த்ததாக கூறுகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,  தினமும் காலையில் பறவைகளுக்கு உணவு வழங்குவேன். ஒருநாள் காலை உணவை உண்ண வெள்ளை காகம் காத்திருப்பதை பார்த்தேன். மற்ற பறவைகளில் இருந்து அந்த காகம் தனித்து இருந்தது என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: டிரைலரில் இருந்த பாட்டு படத்தில் இல்லை என நஷ்டஈடு கேட்ட நபர்: பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிமன்றம் கண்டனம்!


    மரபணுசிதைவு காரணமாக  10 ஆயிரத்தில் ஒரு காகம் வெள்ளையாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவை அரிதானவை என்றும் கூறுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: