• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அழகான பெண்களுக்கு, சினிமா ஸ்டார்களுக்கு பாஜக-வில் உடனே பதவி, தேர்தல் சீட்- முன்னாள் ஆளுநர் விமர்சனம்

அழகான பெண்களுக்கு, சினிமா ஸ்டார்களுக்கு பாஜக-வில் உடனே பதவி, தேர்தல் சீட்- முன்னாள் ஆளுநர் விமர்சனம்

முன்னாள் கவர்னர் ததகத ராய்

முன்னாள் கவர்னர் ததகத ராய்

  • Share this:
    திரிபுரா, மேகாலயா மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் ததகத ராய் என்பவர் பாஜக-வின் ஊழல்வாதிகளை அம்பலப்படுத்துவேன் என்று சபதம் வெளியிட்டுள்ளார். ஆனால் பாஜகவோ இவரை ஒரு பெரும்சுமை என்று கூறி விமர்சித்துள்ளது.

    ததகத ராய் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். ததகத ராய் மேற்கு வங்க பாஜகவுக்கு 2002-2006 வரை தலைமை 2002 முதல் 2015 வரை தெசிய செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார் ததகத ராய். திரிபுரா கவர்னராக 2015-18 காலக்கட்டத்திலும் மேகாலயா கவர்னராக 2018-2020-ல் பணியாற்றியுள்ளார்.

    ஏப்ரல் 2020-ல் இவரது ஆளுநர் பதவிகளெல்லாம் காலியான பிறகு பாஜகவில் செயல்பூர்வ உறுப்பினராக தான் போராடி வருவதாகத் தெரிவித்தார். 2015- ல் திரிபுரா கவர்னர் ஆன பிறகு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். சாதாரண உறுப்பினரை விட செயல் உறுப்பினர் பதவி ஒருபடிமேல். சாதாரண உறுப்பினராக பாஜகவுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். ஆனால் பாஜகவில் செயல்பூர்வ உறுப்பினராக வேண்டுமெனில் படிவம் ஒன்றை பூர்த்தி செய்து ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். இவர்கள்தான் கட்சிப்பணிகளை செய்பவர்கள்.

    இந்த செயல்பூர்வ உறுப்பினர் பதவிக்காக ததகத ராய் முயன்று வருகிறார் ஆனால் இதுவரைப் பயனில்லை, காரணம் இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பி.எல்.சந்தோஷ், கைலாஷ் விஜய் வார்க்யா போன்ற பெரிய பாஜக தலைவர்களே இவரைப் புறக்கணிக்கின்றனர். பெரும்பாலும் “அழகான பெண்கள், நட்சத்திரங்கள், கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு உடனடியாக பாஜகவில் உறுப்பினர் பதவி, தேர்தல் சீட் கிடைக்கும். பாஜக தலைவர்கள் திரிணாமூல் குண்டர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை என் போன்ற வீரர்களுக்கு கொடுப்பதில்லை.

    நான் கட்சிக்காக 40 ஆண்டுகாலம் உழைத்துள்ளேன் எனக்கு உறுப்பினர் பதவி இல்லையா? என்னை இப்படி இழிவு படுத்தலாமா? ஒரு விசுவாசியாக மிஸ்டு கால் கொடுத்து சாதாரண உறுப்பினராகச் சேர்ந்தேன்” என்று புலம்பியுள்ளார்.

    மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியவர் இந்த ததகத ராய் இப்போது தன்னை ‘விசில் புளோயர்’ அதாவது ஊழலை அம்பலப்படுத்துபவன் என்று தன்னையே அறிவித்துக் கொண்டுள்ளார். மேலும் பாஜகவில் உள்ள ஊழல்களை அம்பலப்படுத்துவேன் என்று சூளுரை விடுக்கிறார் ததகத ராவ்.

    “என்னுடைய கவர்னர் பதவி முடிந்தவுடன் கட்சியில் சேர்ந்து தொண்டாற்றுகிறேன் என்று கூறினேன், ஆனால் நான் பதவியோ, டிக்கெட்டோ கேட்கவில்லை. நான் விஜய் வார்கியா, திலிப் கோஷ் ஆகியோரை சந்தித்தேன். என்னை கட்சியில் சேர்க்குமாறு கூறினேன். கோஷ் தலைமையில் பணியாற்றத் தயார் என்றேன். ஆனால் அவர்கள் என்னைப் புறக்கணித்தனர். என்னிடம் ரகசியங்கள் ஏராளமாக உள்ளன, அதை அம்பலப்படுத்துவேன்.

    என்னை ஏன்கட்சியில் சேர்க்கவில்லை என்பது எனக்குப் புரிகிறது, அங்கு ஏகப்பட்ட தவறுகள் நடக்கின்றன. நட்டாஜியிடம் 10 பக்க அறிக்கை அளித்தேன் அவர் எனக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்துள்ளார். ட்விட்டர்களில் விஜய் வார்கியா பற்றியும் கோஷ் பற்றியும் எழுதி வருகிறார், ஆனால் இவரை ஆர்.எஸ்.எஸ். அல்லது பாஜக கேள்வி கேட்கவில்லை.

    இவரை விஜய் வார்கியாவோ, கோஷோ கண்டுக்கொள்ளவில்லை, கட்சித் தலைமையும் கண்டு கொள்ளவில்லை நட்டா இவரிடம் அமைதியாகக் கட்சிப் பணியாற்றக் கோரியுள்ளார், ஆனால் அவர் அதனை கேட்கவில்லை என்று பாஜகவின்மேற்கு வங்கத் தலைவர்கள் ததகத ராவை விமர்சித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: