மக்களவைத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள மத்திய அமைச்சர்கள்!

news18
Updated: May 23, 2019, 6:55 PM IST
மக்களவைத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள மத்திய அமைச்சர்கள்!
கே ஜே அல்போன்ஸ்
news18
Updated: May 23, 2019, 6:55 PM IST
மக்களவைத் தேர்தல் 2019-ல் பாஜக வெற்றிப் பெறுவது உறுதியான நிலையில் தற்போது மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் பின்னடைவை சந்தித்துள்ளார்கள்.

உத்திர பிரதேசத்தின் காசிபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ள தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, பகுஜன் சமாஜ் வேட்பாளர் அஃப்சல் அன்சாரியை விட 65,000 வாக்குகள் பின் தங்கியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வ்ய் செய்யப்பட்டு, பின்னர் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்ட அல்போன்ஸ் கண்ணந்தானம், தற்போது எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், நடப்பு தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் மற்றும் சிபிஐ வேட்பாளர்களை விட குறைவான வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.


அம்ரிஸ்ட்டர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதித் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி 98,000 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேலும் பார்க்க:
First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...