• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரதமர் மோடி மக்களின் மனதை புரிந்திருந்தால்.. இப்படி நடந்திருக்காது; ராகுல் காந்தி

பிரதமர் மோடி மக்களின் மனதை புரிந்திருந்தால்.. இப்படி நடந்திருக்காது; ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

கொரோனா 3வது அலையைத் தடுக்க நாட்டில் இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் 60 சதவித மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதை மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.

  • Share this:
    பிரதமர் மோடி மக்களின் மனதை புரிந்திருந்தால், கொரோனா தடுப்பூசி விநியோகம் மந்தமாக நடைபெற்றிருக்காது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் தடுப்பூசி விநியோகத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஏன் வேகப்படுத்தப்படவி்ல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    மாதத்தின் கடைசி ஞாயிறன்று பிரதமர் மோடி மக்களுக்கு வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அதைக் குறிப்பிடும், வகையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், மக்களின் மனதை புரிந்திருந்தால், தடுப்பூசி விநியோகம் மந்தமாக நடைபெற்றிருக்காது என விமர்சித்துள்ளார்.

    Also read: ஓடும் ரயிலில் சிக்கிய பயணி; நொடிப் பொழுதில் மீட்ட காவலர் - உறைய வைக்கும் காட்சி!!

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா 3வது அலையைத் தடுக்க நாட்டில் இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் 60 சதவித மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதை மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது. அப்படி என்றால், அதற்கு ஒரு நாளைக்கு 93 லட்சம் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    கடந்த ஏழு நாள்களில், சராசரியாக ஒரு நாளைக்கு 36 லட்சம் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக 56 லட்சம் தடுப்பூசிகள் குறைவாக செலுத்தப்பட்டுள்ளது.

    நாட்டு மக்களின் மனதை புரிந்து கொண்டவராக இருந்திருந்தால், தடுப்பூசி செலுத்தும்நிலை இப்படி இருந்திருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பதிவுடன் ராகுல் #WhereAreVaccines என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: