பாஜகவினர் காரில் சென்றால் அதனை வீடியோ எடுத்துவைத்துகொள்ளுங்கள் என்று கர்நாடக
காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பாஜகவினர் எப்போது மக்கள் மீது மோதுவார்கள் என்பதே தெரியாது என்பதால் இத்தகைய வீடியோக்கள் ஆதாரமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரைகொண்டு மோதிய சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை, 9 பேர் உயிரிழந்தது போன்றவை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக பாஜகவை விமர்சித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்களுக்கு வேண்டுகோள் என்று வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், “ஒரு பிஜேபி தலைவரின் கார் கடந்து செல்வதை நீங்கள் காணும் போதெல்லாம், உங்கள் தொலைபேசி கேமராவைத் திறந்து பதிவு செய்யுங்கள்.
அவர்கள் எப்போது தங்கள் காரை மக்கள் மீது மோதி அவர்களைக் கொல்ல முடிவு செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.அத்தகைய சூழலில் உங்கள் வீடியோ ஆதாரமாக மாறும். இது நாட்டிற்கு நீங்கள் செய்யும் சிறந்த சேவையாக இருக்கு” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரைகொண்டு மோதியதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நெருக்கமான இரண்டு பேர் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். ஆஷிஷ் மிஸ்ரா இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழைய வாகனங்களை அழிப்பவர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.