CBSE : குழு அமைத்து மதிப்பெண்கள் கணக்கீடு... சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

மாணவிகள்

சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், குழு அமைத்து மதிப்பெண் கணக்கீட்டு முறையை நிர்ணயிக்க முடிவு. தேர்வு முடிவுகளை ஜூலை இறுதிக்குள் வெளியிடவும் திட்டம்.

  • Share this:
    பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் வெற்றியை நிர்ணயிப்பதற்கான மதிப்பீடு குறித்து பரிந்துரை வழங்குவதற்கு ஒரு குழுவினை அமைக்க சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது. அந்த குழு வழங்கும் ஆலோசனை அடிப்படையில் மதிப்பீடு திட்டத்தை இறுதிசெய்ய சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது.

    10 ஆம் ஆண்டு இறுதி தேர்வு மதிப்பெண், 11, 12 வகுப்புகளில் பள்ளிகள் நடத்திய தேர்வுகள், உள்மதிப்பீடு மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற செயல்முறை தேர்வு முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்வது குறித்து ஒரு திட்டம் வகுக்கப்பட உள்ளது.

    இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் அனைத்து பள்ளிகளிடமிருந்தும். மாணவர்களின் மதிப்பீடுகளைப் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட சி.பி.எஸ்.இ திட்டமிட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Must Read : இந்தியாவில் பரவும் உருமாறிய கொரோனாவின் ஒரேயொரு வகைதான் அச்சுறுத்தல்: உலகச் சுகாதார அமைப்பு தகவல்

    நாளை உச்சநீதிமன்றத்தில் தேர்வு குறித்த வழக்கு விசாரணைக்கு வரும்போது கூடுதல் விபரங்களை நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தரப்பில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Suresh V
    First published: