ஜிஎஸ்டி-க்குள்ள பெட்ரோல், டீசலைக் கொண்டு வாங்கன்னுதான் சொல்றோம், அவங்கதான் முடிவு செய்யணும்: மத்திய பெட்ரோலிய அமைச்சர்

மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

நாகலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை மாநில அரசு குறைத்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.18.26 லிருந்து ரூ.16.04 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இதற்கு உலக கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகின்றனர்.

    ஆனால் மத்திய அரசின் வரியும் மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியும் கடுமையாக விதிக்கப்படுவதால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என்று ஒரு தரப்பினரும், சில விமர்சகர்கள் தனியார் எண்ணெய் நிறுவனங்களின் சில்லரை விற்பனை வர்த்தகத்தை அதிகரிக்கவே இந்த விலை உயர்வு என்றும் கடும் விமர்சனங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை மாநில அரசு குறைத்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.18.26 லிருந்து ரூ.16.04 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கான வரி 25% முதல் 26.80% குறைக்கப்பட்டுள்ளதால் விலையும் குறைந்துள்ளது என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில் அன்று நிர்மலா சீதாராமன் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கூறிய அறிந்த நிரந்தரங்களைத்தான் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டுமொருமுறை பேசியிருக்கிறார்:

    “பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பினால் பெட்ரோல் டீசல் நுகர்வோர் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. கோவிட் 19-னால் உலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை குறைந்துள்ளது. கச்சா விலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். கச்சா உற்பத்தியும் குறைந்துள்ளது.

    பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வாருங்கள் என்றுதான் நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம், இது மக்களுக்குப் பயனளிக்கும். ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

    பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து 10 நாட்களாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் லிட்டருக்கு ரூ.100-ஐத் தாண்டியுள்ளது. கடந்த சனியன்று மும்பையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத ரூ.97-ஐ எட்டியது. டீசல் விலை ரூ.88-ஐ கடந்தது.

    டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90.83 ஆகவும் டீசல் விலை ரூ.81.32 ஆகவும் உள்ளது.

    சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி முந்திய ஆட்சி நம்மை இறக்குமதி சார்ந்த நாடாகச் செய்ததால் இன்று மத்தியதர வர்க்கம் அதன் சுமையை சுமக்க வேண்டியுள்ளது என்று கடந்த ஆட்சியை காட்டிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் உண்மையில் பெட்ரோல் விலையை ரூ.100 வரையிலும் கொண்டு சென்றால்தான்  பெட்ரோலியக் கண்டுப்பிடிப்பு, சுத்திகரிப்பு ஆகிய முதலீடுகளைச் தனியார், அயல்நாட்டு நிறுவனங்கள் செய்யும்  என்றும் அதோடு அவர்கள் சில்லரை விற்பனை நிலையங்களை நாடு முழுதும் திறக்கும் போது ரூ.100 ஆக இருந்தால்தான் அவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்றும் தெரிந்துதான் விலை உயர்வதாக சிலபல சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை சமூக ஊடகங்களில் வைத்து வருகின்றனர்.

    மத்திய அரசு உற்பத்தி வரியை ரூ.10 குறைத்தாலே இந்த சுமையிலிருந்து தப்பிக்கலாம் என்றே இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.
    Published by:Muthukumar
    First published: