Home /News /national /

கொரோனா பாதித்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும்? மத்திய அரசு அறிவுரை!

கொரோனா பாதித்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும்? மத்திய அரசு அறிவுரை!

தடுப்பூசி

தடுப்பூசி

மருத்துவமனை, ஐசியூ.வில் தீவிர சிகிச்சை பெறுபவர்கள், வேறு ஏதேனும் தீவிரமான நோய் உள்ளவர்கள் குணமடைந்த பிறகு தடுப்பூசிக்கு 4 முதல் 8 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

    கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும் என்பது தொடர்பாக மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, தடுப்பூசி போடும் திட்டம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடுவது தொடர்பாக அவ்வப்போது ஆலோசனை வழங்க நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது.

    அதன்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதுகுறித்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதார செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்கள், அதில் இருந்து குணமடைந்தவர்கள், முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள நினைப்பவர்கள் தடுப்பூசி போடுவதை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட பிறகு 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்.

    Also read... 5 மாநில தேர்தல்: பேரணி, பிரசாரத்திற்கான தடை ஜனவரி 31வரை நீட்டிப்பு

    கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்ட பிறகு ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரும் பாதிப்பில் இருந்து குணமடைந்த பிறகு 3 மாதங்கள் கழித்து 2-ம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களும் 3 மாதங்கள் கழித்தே தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மருத்துவமனை, ஐசியூவில் தீவிர சிகிச்சை பெறுபவர்கள், வேறு ஏதேனும் தீவிரமான நோய் உள்ளவர்கள் குணமடைந்த பிறகு தடுப்பூசிக்கு 4 முதல் 8 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்தப் பரிந்துரைகள் அறிவியல்பூர்வமாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

    இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தடுப்பூசி பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Also read... பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையாதது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Corona Vaccine, Covid-19, Covid-19 vaccine

    அடுத்த செய்தி