ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு சாம்பார் சாதம்... போதாததற்கு ரூ. 50 ஆயிரம் சுருட்டல்...!

ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு சாம்பார் சாதம்... போதாததற்கு ரூ. 50 ஆயிரம் சுருட்டல்...!
  • News18
  • Last Updated: February 14, 2020, 9:50 AM IST
  • Share this:
நிச்சயம் அந்த மென் பொறியாளருக்கு அந்த நாள் துரதிஷ்டவசமான நாளாகத்தான் இருந்திருக்கும். ஹைதராபாத்தைச் சேர்ந்த அவர் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஆசைப்பட்டு, ஆர்டர் செய்த பின்னர் நிகழ்ந்த விபரீதம் ஒரு பக்கம் ஆன்லைன் ஆபத்தையும் உணர்த்துகிறது.

கடந்த ஞாயிறு அன்று ஜூபிலி ஹில்ஸில் ரஹ்மத் நகரைச் சேர்ந்த அந்த மென் பொறியளர் ஸொமாட்டோவின் ஃபுட் டெலிவரி ஆப்பில் ’ஸ்பெஷன் சிக்கன் பிரியாணி’ ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருடைய ஆர்டர் வேறு யாருக்கோ மாறிச் செல்ல அவருக்கு சாம்பார் சாதம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதைப் பார்த்ததும் கடுப்பாகிய அவர் ஆப்பில் கஸ்டமர் கேர் நம்பரை தேடியுள்ளார். கிடைக்கவில்லை. பின் கூகுளை நாட அதிலும் நம்பர் கிடைக்கவில்லை.

பின் ஏதோ ஓர் நம்பர் கிடைக்க அதுதான் ஸொமாட்டோ கஸ்டமர் கேர் நம்பர் என நம்பி புகார் அளிக்க அழைத்துள்ளார். அந்த அழைப்பை எடுத்தவரும் ஸொமாட்டோ ஊழியரைப் போல் மென்மையாக பேசியுள்ளார். அவரும் தன்னுடைய புகாரைத் தெரிவித்துள்ளார். உடனே அந்த ஊழியர் உங்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன். உங்களுடைய பணத்தை மீண்டும் உங்கள் வங்கிக் கணக்கிற்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.


அதற்கு தாங்கள் ஒரு கியூ ஆர் கோட் அனுப்புவதாகவும் , அதை ஸ்கேன் செய்யச் சொல்லியுள்ளார். அந்த மென் பொறியாளரும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்துள்ளார். மறுநொடியே அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 50,000 ரூபாய் டெபிட் செய்யப்பட்டுள்ளாதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. உடனே அதைக் கண்டு அதிர்ந்து போய் ஹைதராபாத் இணையதள குற்றங்கள் உதவி போலீஸ் கமிஷனரைச் (ACP) சந்தித்து புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஏ.சி.பி கூறிய போது ”நங்கள் இந்த புகாரை ஐபிசி 420 மற்றும்கணினி வளத்தைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்வதன் மூலம் மோசடி செய்ததற்கான தண்டனையாக ஐ.டி சட்டத்தின் 66 டி ஆகியவற்றின் கீழ் விசாரனை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இதுகுறித்து ஸொமாட்டோ பேசியபோது “ நாங்கள் வாடிக்கையாளர்களிடம் எங்களிடம் கஸ்டமர் கேர் சேவை எண் கிடையாது. ஆன்லைன் சாட் மற்றும் மெயில் சேவை மட்டுமே உள்ளது என்று தொடர்ந்து கூறிவருகிறோம். மேலும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டுவருகிறோம்.எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர்களின் தனிப்பட்ட அல்லது வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் " இவ்வாறு கூறியுள்ளனர்.ஆகவே..நீங்களும் இப்படி பாதிக்கப்பட்டால் கூகுளில் ஸொமாட்டோ கஸ்டமர் கேர் எண்ணை தேடாதீர்கள். அவர்களிடம் வாடிக்கையாளர் சேவை எண் கிடையாது. ஆன்லைன் சாட் மற்றும் மெயில் புகார்கள் மட்டுமே உள்ளன.

 

 
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்