முகப்பு /செய்தி /இந்தியா / CAA : குடியுரிமை திருத்தச் சட்டம் எப்போது அமலாகும்? மத்திய அமைச்சர் விளக்கம்

CAA : குடியுரிமை திருத்தச் சட்டம் எப்போது அமலாகும்? மத்திய அமைச்சர் விளக்கம்

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை வகுப்பதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வரை அவகாசம் கோரியுள்ளது.

  • Last Updated :

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமல்படுத்தப்படுவது தாமதமாகும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிஏஏ சட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை வகுப்பதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சகம் அவகாசம் கோரியுள்ளதால், இந்த சட்டம் அமல்படுத்தப்படுவது தாமதமாகும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் பாகிஸ்தான், வங்க தேசம், ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாத இந்து, சீக்கியர், சமணம், பௌத்தம், பார்சி, கிறிஸ்தவர் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

இந்நிலையில், பெகாசஸ் விவகாரம், வேளாண் சீர்திருத்த சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆலோசனை நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல்காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகோய், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் தேசிய வாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசிய மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க நாடாளுமன்றம் அனுமதி மறுத்து வரும் சூழலில், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலையிட்டு பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசை அறிவுறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

Must Read : Pegasus | பெகாசஸ் மென்பொருள் மூலம் சீமான் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதா?

top videos

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன. எனினும், பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Citizenship Amendment Act, Parliament