விருதும் அதிர்ச்சியும்: வார்த்தைகள் இல்லாமல் தடுமாறிய செய்தி வாசிப்பாளர்

விருதும் அதிர்ச்சியும்: வார்த்தைகள் இல்லாமல் தடுமாறிய செய்தி வாசிப்பாளர்
செய்தி வாசிப்பாளர் ஸ்ரீஜா
  • Share this:
கேரள மாநிலம், மாத்ருபூமி செய்தி சேனல் தலைமை சப் எடிட்டரான ஸ்ரீஜா, மாநில ஊடக விருது தனக்குக் கிடைத்திருக்கும் செய்தியை வாசிக்கும்போது மகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் வார்த்தைகளின்றி தடுமாறினார்.

கேரள ஊடக விருதுகள் பற்றிய செய்திகளை செய்தி நேரலையில் தெரிவித்த மாத்ருபூமி தொலைக்காட்சியின் மூத்த சப் எடிட்டர் பணியில் இருக்கும் ஸ்ரீஜா, மகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் சில நொடிகள் வார்த்தைகளின்றி தடுமாறினார்.

உடன் பணியாற்றும் அவரது நண்பர்கள் முன்னதாக அவரிடம் இந்த செய்தியைத் தெரிவிக்காமல், ரகசியம் காத்துள்ளனர். திடீரென ப்ராம்ப்டரில் தனது பெயரையும், விருது கிடைத்த செய்தியையும் பார்த்த ஸ்ரீஜாவின் குரலில் அந்தச் செய்தியை படித்து முடிக்கும் வரை, மகிழ்ச்சியும் புன்னகையும் கலந்திருந்தது. முகநூல் வழியாக மாநில அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார் ஸ்ரீஜா. மகிழ்ச்சியிலும், பெருமையிலும் சில நொடிகள் தடுமாறிய செய்தியாளர் ஸ்ரீஜாவின் மகிழ்ச்சி வீடியோ, சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.


First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்