காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவிட்டு பின்னர் அதை நீக்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினமான இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தி பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் காந்தியின் புகைப்படத்தை கொண்ட ட்வீட்டில், ஒரு பெரிய மரம் விழும் போது, நிலமே அதிரும் என வாசகத்தை வைத்து அவர் ட்வீட் செய்துள்ளார்.
Adhir Ranjan Chowdhury has decided to call a spade a spade.
Gandhis be damned. pic.twitter.com/wnmv8cgIti
— Amit Malviya (@amitmalviya) May 21, 2022
இந்த ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அது சில நிமிடங்களில் அவரது கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
வாசகங்களின் பின்னணி
1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ராஜீவ் காந்தியின் தாயாரும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தி சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த தனது பாதுகாவலர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 2,000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜீவ் காந்தி, ஒரு பெரிய மரம் விழும் போது, நிலம் சற்று ஆட்டம் காணத்தான் செய்யும் என கருத்து தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இது சீக்கியர்களின் படுகொலை நியாயப்படுத்தும் கூற்று என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
பல ஆண்டுகள் கழித்தும் ராஜீவ் காந்தியின் இந்த கருத்து பழிச்சொல்லாக விடாமல் துரத்தும் நிலையில், இந்த வாசகங்களை ராஜீவ் நினைவு தின அஞ்சலிக்காக அதிர் ரஞ்சன் பதிவிட்டது கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கியுள்ளது. ட்வீட்டை நீக்கிய பின், அந்த ட்வீட்டில் உள்ள கருத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை வைத்து எனக்கு எதிராக மோசமான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது என அதிர் ரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார்.
The tweet against my name in the tweeter account has nothing to do with my own observation.
— Adhir Chowdhury (@adhirrcinc) May 21, 2022
பாஜக, ஓமர் அப்துல்லா எதிர்வினைகள்
அதிர் ரஞ்சனின் இந்த ட்வீட்டுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளனர். அதிர் ரஞ்சன் சௌத்ரி உள்ளதை உள்ளபடி கூறியுள்ளார் என பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாளவியா கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாடு கட்சி தலைவருமான ஓமர் அப்துல்லா 'முதலைவரின் நினைவு தினத்தன்று இது போன்ற வாசகத்தை எந்தவொரு நபராவது பதிவிடுவாரா. காங்கிரஸை வீழ்த்திக்கொள்ள வேறு நபர்கள் தேவையில்லை. அந்த கட்சியினரே போதும்' என ட்வீட் செய்துள்ளார்.
What on earth did he think using this quote was going to do for his party or the memory of the leader he was paying tribute to? The Congress doesn’t need others to pull it down when it does such a good job scoring self-goals. pic.twitter.com/MjVsjfWLTa
— Omar Abdullah (@OmarAbdullah) May 21, 2022
இந்த சர்ச்சை குறித்து காங்கிரஸ் தரப்பில் எந்த விளக்கமும் தரவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress leader, Rajiv gandhi