கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்க வாட்ஸ்-ஆப் தகவல் மையம்!

யோகா மற்றும் உடற்பயிற்சி ஆகியவை கொரோனாவிற்கு எதிரான கவசமாக இருக்காது எனக் கூறிய பிரதமர், வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்க வாட்ஸ்-ஆப் தகவல் மையம்!
வாட்ஸ்அப்
  • Share this:
கொரோனா வைரஸ் தொடர்பான உண்மை தகவல்கள் மற்றும் உதவிகளைப் பெற வாட்ஸ்-ஆப் உடன் இணைந்து மத்திய அரசு தகவல் மையத்தை உருவாக்கியுள்ளது.

வாரணாசி தொகுதி மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடினார். அப்போது கொரோனா தொடர்பான அச்சம், விழிப்புணர்வு உள்பட பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள வாட்ஸ் ஆப் உடன் இணைந்து தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

9013151515 என்ற எண்ணுக்கு நமஸ்தே என இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் வாட்ஸாப் செய்து கேள்விகளை கேட்டால், உடனடி பதில் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.


மேலும், யோகா மற்றும் உடற்பயிற்சி ஆகியவை கொரோனாவிற்கு எதிரான கவசமாக இருக்காது எனக் கூறிய பிரதமர், வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்