வாட்ஸ் அப்பில் வதந்திகளை தடுக்க சிறப்பு அதிகாரி நியமனம்

வாட்ஸ் அப்பில் வதந்திகளை தடுக்க சிறப்பு அதிகாரி நியமனம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: September 23, 2018, 10:26 PM IST
  • Share this:
பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கான சிறப்பு அதிகாரி வாட்ஸ்அப் நிறுவனம் நியமித்துள்ளது.

வாட்ஸ் அப் மூலம் பரவும் உண்மையில்லாத செய்திகள் மூலம் பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இதைத் தடுக்கும் வகையில் சமூக ஊடகங்கள் மூலம் பரவும் செய்திகளின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

குறிப்பாக அதிக அளவில் செய்திகள் பரப்பப்படும் வாட்ஸ் அப், செய்திகளின் உண்மைத்தன்மையை அறியும் வகையில், இந்தியாவுக்கான குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, தற்போது கோமல் லாஹிரி என்பவர் வாட்ஸ் அப்பின் இந்தியாவிற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தங்கள் குறைகளை கூறுவதற்கான வழிமுறைகளையும் வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை கூறலாம் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது.
First published: September 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading