பிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? : முதலமைச்சர் விளக்கம்

எடப்பாடி பழனிசாமி

அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

 • Share this:
  தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திறந்துவைப்பதற்கும், புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும் பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மட்டுமே பேசப்பட்டது என்று தெரிவித்தார்.

  தொடர் மழையால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான நிவாரன நிதி குறித்துப் பேசப்பட்டதாக முதலமைச்சர் கூறினார். மேலும்,  நெல் கொள்முதலுக்கான ஆதாதர விலையை உயர்த்துவது குறித்துப் பேசப்பட்டதாகவும் அப்போது தெரிவித்தார்.

  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுள் 40 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றவர்கள் அடுத்த சில நாட்களில் விடுதலை செய்ய இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
  Published by:Suresh V
  First published: