• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அமித் ஷா - எடியூரப்பா சந்திப்பு... விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்!

அமித் ஷா - எடியூரப்பா சந்திப்பு... விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்!

அமித் ஷா - எடியூரப்பா

அமித் ஷா - எடியூரப்பா

கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராக சில மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

  • Share this:
    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின் போது, அடுத்தாண்டு நடைபெறவுள்ள கட்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்தும் 2024-ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

    கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராக சில மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரசு நிர்வாகத்தில் எடியூரப்பாவின் மகன் தலையிடுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், எடியூரப்பாவின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெறும் நிகழ்வாக இருந்தது. இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சராகக் கூடுதலாகப் பொறுப்பேற்றுள்ள அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் அடுத்து நடைபெறும் மக்களவை தேர்தல், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து எடியூரப்பா கூறுகையில், “கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை அமைக்கும் பொருட்டு கடுமையாக உழைக்குமாறு அமித் ஷா கேட்டுக் கொண்டார். அதேபோல மக்களவை தேர்தலிலும் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்றார். பாஜகவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் பாஜக நிச்சயம் 100 சதவீதம் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனவும் அமித் ஷா என்னிடம் கூறினார்” என்றார். அத்துடன், கர்நாடகாவில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்றும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமித் ஷா தன்னிடம் கேட்டுக் கொண்டதாக எடியூரப்பா கூறினார்.

    Must Read : சென்னை-புதுச்சேரி-நாகப்பட்டினம் இடையே கப்பல் போக்குவரத்து - 5 மாதங்களில் தொடக்கம்

    எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் குறித்து பேசிய எடியூரப்பா, “இது முற்றிலும் பொய்யான தகவல். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. சில அமைச்சர்கள் கிளப்பிவிட்டிருக்கும் இதுபோன்ற வதந்திகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. கட்சித் தலைமை எப்போது என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறதோ, அப்போது நான் ராஜினாமா செய்வேன்” என்று விளக்கம் அளித்தார்.

    தொன்னிந்தியாவில் பாஜக தனது ஆட்சி அதிகாரத்தை நிறுவும் நோக்கில் தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றி வரும் வேளையில் நிகழ்ந்துள்ள இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: