ரஃபேல்: சிஏஜி அறிக்கை கூறுவது என்ன? - முழு விவரம்

அறிக்கையை அச்சிட்ட தாள் அளவுக்குகூட சிஏஜி அறிக்கைக்கு மதிப்பில்லை என ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கடுமையாக சாடினார்.

ரஃபேல்: சிஏஜி அறிக்கை கூறுவது என்ன? - முழு விவரம்
ரஃபேல் போர் விமானம்
  • News18
  • Last Updated: February 14, 2019, 10:26 AM IST
  • Share this:
முந்தைய காங்கிரசைவிட தற்போதைய ரபேல் போர் விமான ஒப்பந்தம் 2.86 சதவீதம் விலை குறைவானது என மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் நிறுவனத்தின் 3 ரபேல் போர் விமானங்கள் பயிற்சிக்காக பெங்களூரு நகரில் தரையறங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று மாநிலங்களவையில் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விமானப்படைக்கான மூலதன கொள்முதல் என்று பெயரிடப்பட்ட அந்த அறிக்கையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சிகளின் இரு ஒப்பந்தங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளும், ஒற்றுமைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி பறக்க தயார் நிலையில் உள்ள விமான விலையில் இரு ஒப்பந்தங்களும் ஒன்றாகவே உள்ளன.

விற்பனைக்கு பிந்தைய சேவை, தொழில் நுட்ப உதவி ஆகியவற்றில் 2016-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் 4.77 சதவிகிதம் சிக்கனமானது. சிறப்பு விரிவாக்கத்தில் பா.ஜ.க ஒப்பந்தம் 17.08 சதவிகிதம் சிக்கனமானது. தயாரிப்பு நிலையிலான விலை விகிதத்தில் இரு ஒப்பந்தங்களும் ஒன்று போல உள்ளன. விமானத்துடனான ஆயுதங்களுக்கான விலை நிர்ணயத்தில் 2016-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் 1.05 சதவிகிதம் குறைவான விலையை கொண்டுள்ளது. மொத்தத்தில் 2016-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் முந்தைய ஒப்பந்தத்தை விட 2.86 சதவிகிதம் சிக்கனமானது என கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் தெரிவித்த கருத்துகள் எதையும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிடவில்லை என குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த அறிக்கையை அச்சிட்ட தாள் அளவுக்குகூட இந்த சிஏஜி அறிக்கைக்கு மதிப்பில்லை என சாடினார்.

ரபேல் தொடர்பான மத்திய கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை தாக்கலான அதே நேரத்தில், பேரிரைச்சலுடன் பறக்கக்கூடிய 3 ரபேல் போர் விமானங்கள் பெங்களூருவில் சத்தமின்றி தரையிறங்கின. விமானங்களுடன் வந்துள்ள தசால்ட் நிறுவன வல்லுனர்கள், இந்திய விமானப்படை வீரர்களுக்கு தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கவுள்ளனர். வருகிற 20-ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் 12-வது ஏர் ஆசியா விமான நிகழ்ச்சியிலும் ரபேல் போர் விமானங்கள் பங்கேற்று சாகசங்கள் நிகழ்த்த உள்ளன.

Also see... வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்த கதை
First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்