முகப்பு /செய்தி /இந்தியா / வீட்டில் இவற்றையெல்லாம் செல்ல பிராணிகளாக வளர்க்கக் கூடாது... மீறினால் அபராதம், சிறை தண்டனை!

வீட்டில் இவற்றையெல்லாம் செல்ல பிராணிகளாக வளர்க்கக் கூடாது... மீறினால் அபராதம், சிறை தண்டனை!

மாதிரி  படம்

மாதிரி படம்

கிளிகள் இன்று அழியக்கூடிய நிலையில் இருப்பதால் வீட்டில் வளர்ப்பதற்கும், கிளிகளை வைத்து சோதிடம் பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்பது எல்லாருக்கும் பிடித்த ஒன்று. பெரும்பாலான வீடுகளில் நாய், பூனை, லவ் பர்ட்ஸ், தங்க மீன்கள் போன்றவை வளர்ப்பு பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. ஒரு சிலர் அதையும் தாண்டி அணில், போன்ற விலங்குகளையும் வளர்ப்பு பிராணிகளாக மாற்றி வருகின்றனர். 

சிங்கம் , புலி, காண்டாமிருகத்தை வீட்டில் செல்லப்பிராணி என்று வளர்த்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். ஏற்கனவே வேட்டைநாய்களை வீட்டுப்பிராணிகளாக வளர்க்க முயன்று பலர் இறந்துள்ளனர். அதற்காக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சில நாய்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது என்னென்ன உயிரினங்களை வீட்டில் வளர்க்கலாம், எதை வளர்க்கக்கூடாது என்று தெரிந்து கொள்வது அவசியம் தானே.

இந்திய சட்டப்பிரிவுகள் மனிதர்களை காப்பது மட்டும் அல்லாமல் வனம், மரம் , செடி, கோடி, பறவைகள், விலங்குகள் என்று எல்லாவற்றிற்கும் பாதுகாப்பு வழங்குகிறது. அதற்காக வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972-ல் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் கீழ் இந்தியாவில் வாழும் உயிரினங்களை பட்டியலிட்டுள்ளனர். அந்த பட்டியலின் அடிப்படையில் அந்த உயிரினங்களின் பாதுகாப்பு நிலை அமைந்துள்ளது.

அழிவை நோக்கி நகரும் உயிரினங்கள் பட்டியல் 1 இல் இடம்பெற்றிருக்கும். மிக அரிதாக காணப்படுபவையாக இருக்கும் இந்த உயிரினங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படும். இந்த பட்டியலில் உள்ள உயிரினங்களை வேட்டையாடுவதும், அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தண்டனைக்குறிய குற்றமாகும். முதல் அட்டவணையில் (schedule 1) அந்தமான் டீல், அஸ்ஸாம் பாம்பூ பார்ட்ரிட்ஜ், பசாஸ் ஆகிய பறவைகள் முக்கியமானவை. இப்பறவைகளை வீட்டில் வளர்த்தால் கட்டாய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல நான்காம் அட்டவணையில் (schedule 4) உள்ள பறவைகளை வீட்டில் வளர்த்தால் அபராதம் விதிக்கப்படும், கட்டாய சிறைத்தண்டனை அல்ல. ஆனால், சிறைத்தண்டனை விதிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த பட்டியலின் கீழ் உளறுவாய் குருவிகள், கூக்குருவான் (barbet ) கடற்புறா (gull) , சின்னான் (bulbul ),செண்டு வாத்து (Comb duck), கொக்கு , நாரை, குயில், ஃபால்மிங்கோ, கிளி, ஆந்தை, மீன்கொத்தி, மைனா போன்ற பறவைகள் உள்ளன.

முக்கியமாக செந்தார்ப் பைங்கிளி , அலெக்ஸாண்ட்ரின் பாராகீட், ரெட் முனியா மற்றும் ஜங்கிள் மைனா போன்ற பறவைகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. ஆப்பிரிக்க சாம்பல் கிளி, நீல-தொண்டை மக்கா மற்றும் மஞ்சள் முகடு காக்டூ ஆகியவை கூட இதில் அடங்கும். இவை அனைத்தும் அழிந்துவரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் கீழ் சர்வதேச வணிக வர்த்தகத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

ஆமையை வீட்டில் வளர்க்க கூடாது. அது நல்ல சகுனம் இல்லை என்று ஒரு சாரார் பேசினாலும் மற்றொருபுறம் ஆமைகளை வீட்டில் வைத்து வளர்க்கும் பழக்கம் இன்றும் உள்ளது. நட்சத்திர ஆமைகள் எல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட வைத்து வளர்க்க தகுதியான அளவில்தான் இருக்கும். ஆனால் அதை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம்.

பறந்து விரிந்த அழகான கடல் நீரில் வளர்ந்த கடல் விலங்குகளை குறுகிய, சிறிய நீர் கிண்ணங்களில் வைத்திருப்பது அதற்கு செய்யும் கொடுமை தானே. இந்த மீன்கள் உப்பு நீர் இல்லாமல் நீண்ட காலம் வாழாது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972ன் படி செட்டேசியன்கள் (டால்பின் அல்லது போர்போயிஸ்), பெங்குயின்கள், நீர்நாய்கள் மற்றும் மானாட்டிகள் ஆகியவை செல்ல பிராணிகளாக வளர்க்க தடைசெய்யப்பட்டுள்ளன. அழிந்து வரும் சில வகை மீன்களும்  தடைசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல குரங்குகளை பொழுதுபோக்கு காரணங்களுக்காக பழக்கப்படுத்தி கூட வைத்துக் கொள்வதும் குற்றமாகும். கிளிகள் இன்று அழியக்கூடிய நிலையில் இருப்பதால் வீட்டில் வளர்ப்பதற்கும், கிளிகளை வைத்து சோதிடம் பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை கிடைக்கும்.

இதையும் படிங்க : திருமணம் போல லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை பதிவு செய்ய வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!

அதேபோல் சமீப காலமாக சில வீடுகளில் வெளிநாட்டுப் பறவைகளை வளர்க்கிறார்கள். வெளிநாட்டுப் பறவைகள் வளர்ப்பதற்கும் Convention on international trade on endangered species of flora and fauna என்ற சர்வதேச அமைப்பிடம் அனுமதி பெற்றிருப்பது அவசியம். இந்தியாவில் சர்வதேச பறவைகளை வளர்ப்பதற்கான நெறிமுறைகளை இந்திய அரசு ஒழுங்கு முறைப்படுத்தத் திட்ட மிட்டுள்ளது

First published:

Tags: Pet animals