முகப்பு /செய்தி /இந்தியா / வருகிறது ‘வந்தே மெட்ரோ..’ - ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

வருகிறது ‘வந்தே மெட்ரோ..’ - ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

வருகிறது ‘வந்தே மெட்ரோ’

வருகிறது ‘வந்தே மெட்ரோ’

நடப்பாண்டிலேயே வந்தே மெட்ரோ ரயில்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பணிகள் நிறைவடைய இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்கவே முடியாதது. அதை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். பெருநகரங்களில் எந்த மாதிரியான போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதிலும் கூட்டம் தான். அப்படி பயணிகளின் வசதிக்காக தொடங்கப்பட்டது தான் மெட்ரோ ரயில் திட்டம். இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. தற்போது மேம்பட்ட மெட்ரோ பயண அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குவதற்காக வந்தே மெட்ரோ ரயில் சேவையை தொடங்க உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவா கூறியுள்ளார்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரயில்வேதுறைக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், புதிய வழித்தட திட்டங்களுக்காக 79 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்நிலையில் வந்தே மெட்ரா திட்டம் தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வந்தே மெட்ரோ திட்டம் குறித்து பார்க்கலாம்.

தற்போது நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் மிக வேகமான, சொகுசான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த ரயிலில் முழுவதும் குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகள் இருக்கும். வந்தே மெட்ரோ ரயிலில் 8 பெட்டிகள் இருக்கும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் வந்தே பாரத்தின் மினி வெர்ஷனாக இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் இருக்கும். விரைவான பயணத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற ரயிலாக இது இருக்கும்.

உதாரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளையும், அதே சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டையை இணைக்கும் வகையிலும் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுமாதிரியான ஓர் ரயில் சேவையாகவே வந்தே மெட்ரரோ ரயில்கள் சேவை இருக்கும். எனவே, வந்தே மெட்ரோ ரயில்களில் வெளியூர்களுக்கு மட்டுமல்ல இன்டர்சிட்டி பயணங்களையும் விரைவில் மேற்கொள்ள முடியும். இது பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் வணிக ரீதியாக விரைவான பயணங்களை மேற்கொள்ள விரும்புவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

Read More : இனி விபத்து ஏற்படாது.. 'வந்தே பாரத்' ரயிலில் வருகிறது புது டெக்னாலஜி!

நடப்பாண்டிலேயே வந்தே மெட்ரோ ரயில்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பணிகள் நிறைவடைய இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார். வந்தே மெட்ரோ ரயில்கள் சென்னையில் அமைந்துள்ள இன்டெக்ரல் கோச் ஃபேக்டரியில் தயாரிக்கப்பட இருக்கின்றன. வந்தே பாரத் ரயில்கள் ஐசிஎஃப்-இல் மட்டுமின்றி மஹாராஷ்டிராவின் லத்தூர், ஹரியானாவின் சோனிபட், உபி-யின் ரேபரேலி ஆகிய இடங்களிலும் தயாரிக்கப்படும் என ரயில்வேத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், வந்தே மெட்ரோ ரயில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குறிப்பிட்ட பெரிய நகரங்களில் இந்த சேவையை தொடங்கவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

First published:

Tags: India, Metro Train, Vande Bharat