• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கைது செய்ய காத்திருக்கும் அமலாக்கத்துறை... சி.பி.ஐக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு...! சிதம்பரம் கைதில் அடுத்து என்ன?

கைது செய்ய காத்திருக்கும் அமலாக்கத்துறை... சி.பி.ஐக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு...! சிதம்பரம் கைதில் அடுத்து என்ன?

சிதம்பரம்

சிதம்பரம்

P Chidambaram | சில வாரங்களில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு சிதம்பரம் தரப்பில் மனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சட்ட வல்லுநரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்து நடக்கப்போவது என்ன? 

சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு, இதே வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட வாய்ப்பு அதிகம்.

ஏனென்றால், ஏற்கனவே இந்த வழக்கில் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த முயற்சிகளை மேற்கொண்டுவந்தது.

ஆனால், நீதிமன்ற தடை காரணமாக அது நடக்கவில்லை. இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கும் என எதிரிபார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி கைது செய்யப்பட்டபோது, சிபிஐ காவல் போக, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட பிறகுதான் ஜாமினில் வெளிவர நீதிமன்றம் அனுமதித்தது.

அதைப்போலவே, இந்த முறை சிதம்பரத்திற்கும் 15 நாட்களுக்குள்ளாக ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

வழக்கமாக, எந்த வழக்காக இருந்தலும், தன்னம்பிக்கையுடன், சட்டத்தின் அனைத்து வாய்ப்புகளிலும் புகுந்து விளையாடும் சிதம்பரத்திற்கு அடுத்தடுத்து கிடுக்கு பிடிகள் இறுகுகின்றன.

சில வாரங்களில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு சிதம்பரம் தரப்பில் மனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

அல்லது தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை நிறுத்திவைக்க கோரியும் மனுதாக்கல் செய்யவும் வாய்ப்புள்ளது.

ஆனால், சிபிஐ தரப்புக்கு ஒரே வாய்ப்புதான். ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுதான் அது.

ஆதாரங்களுடன் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமா? அல்லது சிதம்பரம் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவாரா? இது போன்ற கேள்விகளுக்கு பதில், வழக்கின் போக்கில் அடங்கியிருக்கிறது.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: