மனுவை அரை மணி நேரம் படித்துப் பார்த்தும் புரிந்துகொள்ள முடியவில்லை - உச்சநீதிமன்ற நீதிபதி

மனுதாரரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவில் உள்ள பிழைகளை சரிசெய்து மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

News18 Tamil
Updated: August 16, 2019, 10:55 PM IST
மனுவை அரை மணி நேரம் படித்துப் பார்த்தும் புரிந்துகொள்ள முடியவில்லை - உச்சநீதிமன்ற நீதிபதி
உச்ச நீதிமன்றம்
News18 Tamil
Updated: August 16, 2019, 10:55 PM IST
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்துஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்களிடம் உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  வழக்கறிஞர் எம்.எல். சர்மா, காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் அனுராதா பாஷி உள்ளிட்டோர் வழக்குகளை தொடர்ந்தனர்.

அதில், காஷ்மீர் தொடர்பான தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும், ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இல்லாமல் 370வது சட்டப்பிரிவை நீக்கியது சட்டவிரோதம் என கூறப்பட்டது.  இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனுவை ஆய்வு செய்த தலைமை நீதிபதி, அவரது மனுவை அரை மணி நேரம் படித்துப் பார்த்தும் புரிந்துகொள்ள முடியவில்லை எனக் கூறினார்.

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்க விவகாரத்தில் என்ன நிவாரணம் வேண்டும்? உங்கள் கோரிக்கை என்ன? என மனுதாரரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவில் உள்ள பிழைகளை சரிசெய்து மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Loading...

இதேபோல, மற்ற 4 மனுக்களிலும் பிழைகள் இருப்பதாகவும், இதனை சரிசெய்து மீண்டும் மனுக்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...