• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உங்கள் மகனுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது? அமித்ஷாவுக்கு மம்தா பானர்ஜி கேள்வி

உங்கள் மகனுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது? அமித்ஷாவுக்கு மம்தா பானர்ஜி கேள்வி

மம்தா பானர்ஜி, அமித்ஷா

மம்தா பானர்ஜி, அமித்ஷா

உங்கள் மகனுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது என்று முதலில் சொல்லுங்கள் என்று அமித்ஷாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று பா.ஜ.க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. மேற்கு வங்கத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸையும், மம்தா பானர்ஜியையும் கடுமையாகச் சாடினார். இந்தநிலையில், தெற்கு 24 பார்க்னாஸ் பூத் உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘பா.ஜ.கவின் மூத்த தலைவர் அமித்ஷா இங்கே வந்தார். சாகர் தீவுக்குச் சென்றார். கங்கா சாகர் பகுதியின் வளர்ச்சிக்காக நாம் எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். ஒவ்வொரு நாளும் அவர் எனக்கு சவால் விடுகிறார்.

    நான் அவருக்கு சவால் விட விரும்புகிறேன். அவர் முதலில் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக நிற்கட்டும். பிறகு, என்னைப் பற்றி சிந்திக்கட்டும். அவருடைய மகனை முதலில் முன்னே கொண்டுவந்து ஜனநாயக ரீதியில் போட்டியிடட்டும் என்று அவருக்கு சவால் விடுகிறேன். அபிஷேக் பானர்ஜி ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகிறார். அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்க முடியுமா? என்று நான் சவால் விடுகிறேன்.

    அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? பி.சி.சி.ஐயின் உயர்ந்த பதவியில் இருப்பதற்கு ஜெய்ஷாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்னை அவதூறாக பேசலாம். ஆனால், என்னை புறக்கணிக்க முடியாது என்று அவருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அமித்ஷா, நம்மை மிரட்டுகிறார். அவருடைய உடல்மொழியைக் கவனியுங்கள். அவர் நம்மிடமிருந்து மரியாதையை எதிர்பார்கிறார். அவருடைய பேச்சு பெங்கால் குறித்து எதிர்மறையாக பேசத் தொடங்கி, எதிர்மறையாக பேசி முடிக்கிறார்’ என்று தெரிவித்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: