இந்தியாவில் கழுதைகள் எண்ணிக்கை பாதியாக குறைந்ததற்கு காரணம் என்ன?

இந்தியாவில் கழுதைகள் எண்ணிக்கை பாதியாக குறைந்ததற்கு காரணம் என்ன?

கழுதைகள், குதிரைகளின் எண்ணிக்கை திடீர் சரிவு

2019 கால்நடை கணக்கெடுப்பின் போது இந்தியாவில் மொத்தம் 1.2 லட்சம் குதிரைகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. இது 2012ல் இருந்ததைக் காட்டிலும் 61.23% குறைவாகும்.

  • Share this:
இந்தியாவில் கழுதைகள், குதிரைகளின் எண்ணிக்கை 51.5% குறைந்துள்ளதாக 2019 கால்நடை கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கால்நடைகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதும் குறிப்பாக குதிரைகள், கழுதைகள் மற்றும் கோவேறு கழுதைகளின் எண்ணிக்கையானது இந்தியாவின் அதிக அளவில் குறைந்துள்ளதும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2019 கால்நடை கணக்கெடுப்பு வாயிலாக தெரியவந்துள்ளது. இதே போன்று 2012ல் ஒரு கணக்கெடுக்கு எடுக்கப்பட்டது, தற்போது எடுக்கப்பட்டிருக்கும் கணக்கெடுப்புக்கும் முந்தைய கணக்கெடுப்புக்கும் இடையே 51.5% வித்தியாசம் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

2019 கால்நடை கணக்கெடுப்பின் போது இந்தியாவில் மொத்தம் 1.2 லட்சம் குதிரைகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. இது 2012ல் இருந்ததைக் காட்டிலும் 61.23% குறைவாகும்.

விலங்குகள் நல அமைப்பான Brook India -வின் வெளி விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத் தலைவர் பிரகாஷ் கவுர் இத் தகவல்களை தெரிவித்திருக்கிறார். நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கையில் மிகப் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் சீரியசான விவகாரம், கழுதை மறை சீன சந்தையில் “எஜியாவோ” என்று விற்கப்படுகிறது அங்கு இதற்கான தேவை அதிகம் உள்ளது, அங்கு இதனை வைத்து மருந்து, அழகு சாதன பொருட்கள் தயாரிக்கின்றனர் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். மேலும், சீனாவுக்கு கழுதை மறை ஏற்றுமதி காரணமாக இந்தியாவில் கழுதை எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுத்தது, இந்தியாவில் இது குறித்து ஆராய வேண்டிய அவசியம் உள்ளது என தெரிவித்தார்.

Brook India


கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை கழுதைகளை நம்பியுள்ளது. கிராமப்புற ஏழைகளுக்கு இந்த விலங்குகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக சமீபத்தில் டெல்லியில் ப்ரூக் இந்தியா ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது, இது கழுதைகள், கோவேறு கழுதைகள் மற்றும் குதிரைகள் ஏழைகள் வாழ்க்கையில் வகிக்கும் முக்கிய பங்கை மையமாகக் கொண்டது.

இந்தியாவில் கால்நடை கொள்கைகள், மாடுகள் மற்றும் எருமைகளை மட்டுமே மனதில் வைத்து இயக்கப்படுகின்றன மற்றும் குதிரை குடும்பத்தைச் சேர்ந்த இனங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன.

பயிலரங்கில், ப்ரூக் இந்தியா அமைப்பானது விலங்கு நல அறிவியலில் பணியாற்றியுள்ளதாகவும், அதை முன்னேற்றுவதற்கான வழிகளையும் கருவிகளையும் உருவாக்கியுள்ளது என்றும் கூறினார். இது விலங்குகளை மையமாகக் கொண்ட, குழு அடிப்படையிலான செயல்முறைகளை அடையாளம் காண உதவியது, இதன் கீழ் உள்ள சமூகங்கள், விலங்குகளின் நலனில் எதிர்மறையான விஷயங்களை அடையாளம் காணும், விலங்கு நலனை மேம்படுத்த உதவுகிறது எனவவும் பிரகாஷ் கவுர் கூறினார்.
Published by:Arun
First published: