கட்சிகள் இணைப்பு...? எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் யோசிக்கும் புதிய திட்டம்

அமேதி தொகுதியில் தனக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய அமேதி தொகுதிக்கு ஒரு குழுவை ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சிகள் இணைப்பு...? எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் யோசிக்கும் புதிய திட்டம்
சோனியா காந்தி, ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: May 31, 2019, 8:40 AM IST
  • Share this:
மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தங்களோடு இணைப்பது குறித்தும் காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சிக்கு 52 எம்.பி.க்கள் மட்டுமே இருப்பதால், எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறமுடியவில்லை. இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், பதவி விலகும் முடிவில் ராகுல் காந்தியும் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், பழங்குடியின அல்லது சிறுபான்மையினத்தவரை தலைவராக நியமிக்கலாம் என ராகுல் காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 10 சதவீத இடங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால், 5 எம்.பி.க்களைக் கொண்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியோடு இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.


ஒருவேளை அவ்வாறு இணைக்கப்பட்டால், காங்கிரஸ் தலைவர் பதவியை சரத்பவாருக்கு வழங்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் பலம் 57ஆக அதிகரிக்கும் என்பதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுவிடலாம் என கணக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க இன்று கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில், நாளை நடைபெறவுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அமேதி தொகுதியில் தனக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய அமேதி தொகுதிக்கு ஒரு குழுவை ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Also see... WHO IS NESAMANI | வேர்ல்ட் ஃபுல்லா கான்ட்ராக்டர் நேசமணி ஃபேமஸ் ஆனது எப்படி?

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்