• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆண்களை குச்சியால் அடித்து மகிழும் பெண்கள்: ‛லாத்மர் ஹோலி' பண்டிகை என்றால் என்ன?

ஆண்களை குச்சியால் அடித்து மகிழும் பெண்கள்: ‛லாத்மர் ஹோலி' பண்டிகை என்றால் என்ன?

லாத்மர் ஹோலி என்றால் என்ன?

லாத்மர் ஹோலி என்றால் என்ன?

லாத்மர் ஹோலி பண்டிகையானது கிருஷ்ணர் - ராதா புராணக்கதை மையமாக கொண்டது. இந்த வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் லாத்மர் ஹோலியானது மதுரா அருகே கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Share this:
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டத்தொடங்கிவிட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தின் மதுரா அருகே வித்தியாசமான முறையில் கொண்டாடப்படும் லாத்மர் ஹோலி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் பெண்கள் ஆண்களை குச்சியால் அடித்து மகிழ்கின்றனர்.

வட மாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை வரும் மார்ச் 29ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனிடையே உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் ஒரு வார காலத்துக்கு ‘லாத்மர் ஹோலி’ எனப்படும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இன்று தொடங்கியது. இதில் பெண்கள் ஆண்களை குச்சியால் அடித்து மகிழ்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே பர்சனாவில் உள்ள ராதை கோவில் அருகே, ராதை போன்று வேடமிட்டு பெண்கள் கையில் தடியுடனும் (குச்சி), கோபியரை போல வேடமிட்ட ஆண்களும் கையில் கேடயத்துடனும் திரள்கின்றனர். பெண்களை குச்சிகளால், ஆண்களை பொய்யாக தாக்குகின்றனர், பெண்களின் தாக்குதல் தங்கள் மீது படாதவாறு ஆண்கள் தடுத்து பின்வாங்குகின்றனர். பின்னர் வண்ணங்களை பூசி, ஆடிப் பாடி மகிழ்கின்றனர். ஆண்கள் மீது அடிவிழுகும் பட்சத்தில் அவர்களை மொய்த்துக் கொள்ளும் பெண்கள் அவர்களுக்கு பெண்களின் ஆடைகளை தந்து வீதியில் ஆட வைக்கின்றனர். இதனை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகல் மதுராவில் திரண்டுள்ளனர்.

லாத்மர் ஹோலி என்றால் என்ன?


லாத்மர் ஹோலி என்றால் என்ன?

லாத்மர் ஹோலி பண்டிகையானது கிருஷ்ணர் - ராதா புராணக்கதை மையமாக கொண்டது. மதுரா அருகே அமைந்துள்ள நந்தாகோன் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணர், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, ராதையின் சொந்த ஊரான பர்சனாவிற்கு வருகின்றார். அங்கு ராதையும் அவரின் தோழிகளும் ஹோலி பண்டிகை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். அங்கு வரும் கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ராதை மற்றும் தோழிகளை வம்புக்கு இழுக்கிறார். இதனால் ராதை மற்றும் சகாக்கள் கிருஷ்ணர் மற்றும் சகாக்களை பொய்க்கோவம் கொண்டு குச்சியால் அடித்து விரட்டுகிறார்.

இந்த வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் லாத்மர் ஹோலியானது மதுரா அருகே கொண்டாடப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: