லட்சத்தீவில் நடப்பது என்ன? #SaveLakshadweep டிரெண்டாக காரணம் என்ன?

லட்சத்தீவு

லட்சத்தீவுகளை நிர்வகித்து வரும் பிரஃபுல் படேலை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

 • Share this:
  கேரளக் கரையில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், அரபிக்கடலில் அமைந்திருக்கிறது லட்சத்தீவு. மிகச்சிறிய இந்திய யூனியன் பிரதேசமான இங்கு சுமார் 65000 பேர் மட்டுமே வசிக்கின்றனர். லட்சத்தீவுகளின் நிர்வாகியாக இருந்த தினேஷ்வர் சர்மா 2020ஆம் ஆண்டு டிசம்பரில் காலமானர். டாமன் - டையூ நிர்வாகத்தை கவனித்து வரும் பிரஃபுல் படேல் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நிர்வாகிகளாக நியமித்து வந்த நிலையில் முதல்முறையாக ஓர் அரசியல்வாதி கையில் லட்சத்தீவுகளின் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைத்தது மத்திய அரசு. குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த பிரபுல் கோடா பட்டேல். இவர், பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நெருக்கமானவர்.

  இவரே தற்போதைய குளறுபடிகளுக்கு காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது. லட்சத்தீவுகளின் முந்தைய நிலவுரிமை சட்டப்படி, லட்சத்தீவை பூர்வீகமாக கொண்ட தாய், தந்தையருக்கு பிறந்தவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, தற்போது யார் வேண்டுமானாலும் இடம் வாங்க வழிவகை செய்யும் பிரஃபுல் படேலின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த தீவில், மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததோடு, மதுபான விற்பனைக்கு அனுமதி அளித்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Also Read : அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு- காரணம் என்ன? சிசிச்சை முறை என்ன?

  அத்துடன், கடலோர மக்களின் குடில்களை அகற்ற உத்தரவிட்டதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், மக்கள் தொகையை கட்டுப்படுத்த 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் நிற்கும் தகுதி இல்லை என்ற சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மத்திய அரசு சதி செய்வதாகவும் விமர்சனம் எழுந்துள்ளன.

  Also Read : ரூ.18,000 கட்டணத்தில் விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு பயணித்த பயணி!

  இதையடுத்து, save Lakshadweep என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. கேரள எழுத்தாளர்கள், நடிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இதுகுறித்து பதிவிட்டு வருகின்றனர். லட்சத்தீவு மக்கள் புதிய அதிகாரியால் மகிழ்ச்சியாக இல்லை என பிரபல மலையாள நடிகர் பிருத்திவிராஜ் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். கேரள காங்கிரஸ் தலைவரான ரமேஷ் சென்னிதலா குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் படேலை திரும்ப அழைக்க வேண்டும் என்றும், மக்களின் உணர்வுகளை முழுமையாக மதிக்க குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  லட்சத்தீவில் இருந்து வரும் செய்திகள் மிகவும் தீவிரமானவை என ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் கலாசாரம் மீது சுமத்தப்பட்ட சவால்களை ஏற்க முடியாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: