Home » News » National » WHAT HAPPENED WHEN PRANAB MUKHERJEE GOT A NEW YEAR CARD FROM OBAMA AND HIS DOGS VIN GHTA

ஒபாமாவின் இந்திய பயணம் - ரகசியங்களை உடைத்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிராணாப் முகர்ஜியின் புத்தகம்!

இந்தியாவுக்கான தூதர் ரிச்சார்டு வெர்மா, குடியரசு தின உரையில் இடம்பெற வேண்டிய கருத்துகளை எதையும் ஒபாமா முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று விளக்கியதாகவும் பிரணாப் கூறியுள்ளார்.

ஒபாமாவின் இந்திய பயணம் - ரகசியங்களை உடைத்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிராணாப் முகர்ஜியின் புத்தகம்!
பிரணாப் முகர்ஜி மற்றும் பராக் ஒபாமா
  • News18
  • Last Updated: January 12, 2021, 3:10 PM IST
  • Share this:
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனக்கு கொடுத்த பரிசுப் பொருட்கள் மற்றும் அவருடன் ஏற்பட்ட நெகிழ்வான தருணங்கள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சுயசரிதையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரணாப் முகர்ஜி புத்தகம் : 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது வாழ்க்கை பயணத்தை 'The Presidential Years' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். இதில், பல சுவாரஸ்மான தகவல்கள் மற்றும் சர்ச்சைக் கருத்துகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைமை மீதான விமர்சனம், தான் பணியாற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரதமர் மோடி ஆகியோருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணம், இந்தியாவின்  உள்நாட்டு மற்றும் வெளி விவகாரங்களின் முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை குறித்து வெளிப்படையாக எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது வாரிசுகளான சர்மிஸா புத்தகத்தை வெளியிடுவதில் தீவிரம் காட்டினார், மகன் அபிஜித் புத்தகத்தை வெளியிட வேண்டாம் என பதிப்பாளர்களைக் கேட்டுக்கொண்டார். இருப்பினும், இந்தப் புத்தகம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க அதிபர் வருகை : 

2015ம் ஆண்டு இந்திய குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா (Barack Obama) பங்கேற்றார். அமெரிக்க அதிபர் ஒருவர் இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்றது அதுவே முதன்முறையாகும். அப்போது, இந்தியாவின் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி, தனக்கு ஒபாமா அளித்த நினைவு பரிசுகளையும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‘அமெரிக்க முன்னாள் அதிபர் ஹாரி தாரூமன் (Harry Truman), நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு அனுப்பிய டெலிகிராம் மடலைபராக் ஒபாமா, புத்தாண்டு வாழ்த்து பரிசாக கொடுத்தார். 

அதனை, அப்போது கட்டப்பட்ட அருங்காட்சியகத்துக்கு அனுப்பிவைத்துவிட்டேன்' என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் பராக் ஒபாமாவும், மிட்செல்லும் வழங்கிய புத்தாண்டு வாழ்த்து அட்டையில், ஒபாமா குடும்பத்தினரின் அனைவரது கையெழுத்து இருந்ததாகவும், அதற்கும் மேலாக அவர்கள் வீட்டில் இருந்து இரண்டு செல்லப்பிராணிகளின் கால்தடங்களும் அதில் இருந்ததாக பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு தன்னை வெகுவாக நெகிழச்செய்ததாக தெரிவித்துள்ள பிரணாப் முகர்ஜி, தனிப்பட்ட முறையில் ஒபாமா தன்மீது கொண்டிருந்த அன்பை உணர்த்துவதாக வாழ்த்து இருந்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையிலான பேச்சு மிகவும் நேர்மறையாகவே  இருந்தத்தாகவும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.ஒபாமாவுடன் உரையாடல் : 

2015ம் ஆண்டு, தன்னுடன் ஒபாமா நடத்திய உரையாடல் குறித்தும் பிரணாப் முகர்ஜி எழுதியுள்ளார். அதில், உலக நடப்புகளிலும், 1947ம் ஆண்டுப்பிறகு இந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சிகள் குறித்து ஒபாமா கொண்டிருந்த பார்வை தன்னை வியப்படைய வைத்ததாகவும் தெரிவித்துள்ள பிரணாப் முகர்ஜி, 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிபர் ஆகும்வரை இந்தியா - அமெரிக்க உறவை மேம்படுத்துவதில் எப்போதும் மிகுந்த அக்கறை செலுத்தியதாக ஒபாமா தெரிவித்த கருத்து தன்னை அதிர்ச்சியடைய வைத்ததாகவும் கூறினார். 

பின்னர் இந்தியாவுக்கான தூதர் ரிச்சார்டு வெர்மா, குடியரசு தின உரையில் இடம்பெற வேண்டிய கருத்துகளை எதையும் ஒபாமா முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று விளக்கியதாகவும் பிரணாப் கூறியுள்ளார். ஒபாமா பேசிக்கொண்டிருந்தபோது, தன்னுடைய கருத்துகள் மற்றும் பார்வைகளை முன்வைக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, விருத்தினரை கவருவதற்காக எதையும் செய்யாமல் அரசின் நிலைப்பாட்டை மட்டுமே எடுத்துக்கூறியதாக தெரிவித்துள்ளார்.

Also read... ஜனவரி 14-ம் தேதி ஜல்லிக்கட்டை பார்க்க ராகுல் காந்தி தமிழகம் வருகை!

பிரணாப் முகர்ஜியின் நிலைப்பாடு : 

ஒபாமாவின் பயணத்தின்போது சில கசப்பான நிகழ்வுகளும் நடந்ததாகவும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  குடியரசு தின விழா அணிவகுப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும்போது, அமெரிக்கா அதிபரின் பாதுகாப்பு காரணங்களைக்காட்டி, தன்னை ஒபாமாவின் புல்லட் புரூப் காரில் பயணிக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால், அதனை தான் மறுத்துவிட்டதாகவும், வெளியுறவுத்துறை அதிகாரிகள் மூலம் அதற்கான காரணங்களை கனிவாக ஒபாமாகவுக்கு எடுத்துச்சொல்லபட்டதாகவும் பிரணாப் விளக்கியுள்ளார். வழக்கமாக, விருந்தினரும், குடியரசுத் தலைவரும் ஒரே வாகனத்தில் பயணிப்பார்கள். ஆனால், ஒபாமா பயணத்தின்போது பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அவர்களின் விதிமுறைகள் காரணமாகவும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: January 12, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading