• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Kerala Assembly Election 2021 | சபரிமலை விவகாரம் நடந்திருக்கவே கூடாத ஒன்று: தேவஸம் போர்டு அமைச்சர் வருத்தம்!

Kerala Assembly Election 2021 | சபரிமலை விவகாரம் நடந்திருக்கவே கூடாத ஒன்று: தேவஸம் போர்டு அமைச்சர் வருத்தம்!

சபரிமலை

சபரிமலை

சிபிஎம் கட்சியானது நாடாளுமன்ற தேர்தலின் போது சபரிமலை விவகாரம் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என தெரிவித்தது.

  • Share this:
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரத்திற்காக கேரள தேவஸம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று பரபரப்பு தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது. இதனையடுத்து பினராயி விஜயனின் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி அரசு குறிப்பிட்ட வயதுடைய பெண்களை போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டது, ஆனால் இதற்கு பாஜக, மற்றும் வலதுசாரி அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிபிஎம் கூட்டணி சரிவை சந்தித்தது.

இந்நிலையில் தேவஸம் போர்டு அமைச்சராக இருக்கும் கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலை கோவிலுக்குள் பெண்களை நுழைய அனுமதி அளித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில், அது முடிந்து போன ஒன்று. . 2018ல் நடந்தவை எங்களுக்கு வருத்தத்தை தந்தது. இனிமேல் அது போன்ற ஒன்று நடக்கவே கூடாது என கூறினார்.

எதிர்வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் வலதுசாரி கூட்டணியின் கழக்கூட்டம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலை விவகாரத்திற்காக திறந்தமனதுடன் வருத்தம் தெரிவித்தார். முன்னதாக சிபிஎம் கட்சியானது நாடாளுமன்ற தேர்தலின் போது சபரிமலை விவகாரம் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என தெரிவித்தது.

2018ல் சபரிமலை விவகாரம் அரங்கேறிய சமயத்தில் சபரிமலை செயற்பாட்டாளர்கள் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான இடம் இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது,

தேர்தல் அறிவிக்கப்படும் முன்னதாக சபரிமலை போராட்டம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிரான போராடங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை மாநில அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: