முத்தலாக் மசோதா சொல்வது என்ன?

முஸ்லீம் ஆண்கள் முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்வதை இந்த மசோதா தடுக்கிறது.

Web Desk | news18
Updated: July 31, 2019, 8:19 AM IST
முத்தலாக் மசோதா சொல்வது என்ன?
கோப்பு படம்
Web Desk | news18
Updated: July 31, 2019, 8:19 AM IST
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த முத்தலாக் மசோதாவில் என்ன தான் கூறப்பட்டுள்ளது. மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019 எனப்படும் முத்தலாக் தடை சட்ட மசோதா பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தி, முஸ்லீம் பெண்களுக்கு நீதியை வழங்கும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் ஆண்கள் முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்வதை இந்த மசோதா தடுக்கிறது. முத்தலாக் கூறி விவகாரத்து செய்வதை இந்த மசோதா செல்லாது என்றும் சட்டவிரோதமானது என்றும் அறிவிக்கிறது.


இந்த குற்றத்திற்கு அபராதத்துடன் மூன்றாண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க சட்டம் வழிவகுக்கிறது.  மேலும் விவகாரத்து செய்யப்படும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்கவும் இந்தச் சட்டம் வகை செய்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணோ, அவரது ரத்தரீதியான உறவினரோ இதுதொடர்பாக புகார் அளிக்கலாம். அதன்மீது பிணையில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யலாம். பிணை வழங்கப்படும் முன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்தை கேட்க மசோதா வகை செய்கிறது.

Also Watch

Loading...

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...