Home /News /national /

சிறுபான்மை - பெரும்பான்மை - டாக்டர் அம்பேத்கர் கூறுவது என்ன?

சிறுபான்மை - பெரும்பான்மை - டாக்டர் அம்பேத்கர் கூறுவது என்ன?

அம்பேத்கர் பிறந்த நாள்- சமத்துவ நாள்

அம்பேத்கர் பிறந்த நாள்- சமத்துவ நாள்

பாபாசாகேப் அம்பேத்கரின் 131வது பிறந்தநாள் சாதி, வர்க்கம், மதம் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளைக் கடந்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடந்து கொண்டாடப்பட்டது. இந்தக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நடவடிக்கைகள், இந்தியாவில் அம்பேத்கர் பெரிதும் போற்றப்படுவதை நமக்கு அறிவுறுத்தினாலும் அவரது போதனைகள் அதே முக்கியத்துவம் பெறுகின்றனவா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை நாம் செய்திகளில் வாசிக்கிறோம். இதனால் இந்தியா என்ற ஒரு சமத்துவ, சகோதரத்துவ, சுதந்திர கருத்தியல் பிம்பம் சரிவடைவதாக, களங்கமடைவதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட சமூக ஆர்வலர்கள், தொண்டர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆகவே அம்பேத்கரை பீடத்தில் ஏற்றி வழிபாடு செய்வது வேறு, அவரது போதனைகளை, அவரது சமூக-அரசியல்-பொருளாதார சிந்தனைகளை, தத்துவத்தை புறக்கணிப்பது வேறு. இப்போது சிறுபான்மையினர் என்பது மதச் சிறுபான்மையினர் என்பதாக பொருள் பெற்றுள்ளது. மதச்சிறுபான்மையினர் என்பதும் மிக மிக முக்கியமான ஒன்றுதான் என்று சமூக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் அம்பேத்கரின் மைனாரிட்டி அல்லது சிறுபான்மையினர் குறித்த கருத்தாக்கம் என்பது எண்ணிக்கை சார்ந்த சிறுபான்மையினர் என்பதுடன் குறுக்கப்பட்டதல்ல, மாறாக புறந்தள்ளப்பட்ட, அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த சமூகத்தையும் சிறுபான்மையினர் என்றே அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

1928-ல் அம்பேத்கர் இது தொடர்பாக எச்சரிக்கும் போது கூறுகிறார், “நாம் சிறுபான்மையினர் என்ற பதத்தை பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறிய எண்ணிக்கையில் உள்ள சமூகம் என்பதற்காகவே அவர்கள் சிறுபான்மையினர் என்று அரசியல் நோக்கங்களுக்காக இருக்க வேண்டியது மட்டுமல்ல என்று நான் கருதுகிறேன், சிறுபான்மையினர் என்றால் ஒடுக்கப்பட்டவர்கள், உரிமைகள் பறிக்கப்பட்டவர்கள், ஆகியோர்களே அரசியல் நோக்கங்களுக்காக கருதப்பட வேண்டிய சிறுபான்மை என்று இவர்களையே பரிசீலிக்கக் கருதுகிறேன்” என்றார்.

ஒடுக்கப்பட்ட பிரிவினர்/பட்டியல் வகுப்பினர் சிறுபான்மையினர் ஏனெனில் இவர்களுக்கு சமூக-பொருளாதார-அரசியல் அதிகாரம் இல்லை. அதிகாரப் பகிர்வு குறித்த ஒரு கருத்தாக்கத்தில் அம்பேத்கர் சிறுபான்மையினரை வரையறை செய்தாலும் எண்ணிக்கை அளவில் சிறுபான்மையினர் என்ற கருத்தாக்கத்தையும் அம்பேத்கர் விட்டுவிடவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றிய பின்பு பல்வேறு உரைகள், எழுத்துக்களில் அம்பேத்கர் எண்ணிக்கை அளவிலான சிறுபான்மையினர் பற்றி 1947-ல் கல்லூரி உரையொன்றில் விரிவாகப் பேசுகிறார்.

பெரும்பான்மையினரின் ஆட்சிதான் தெய்வீகச் சட்டம், திருச்சட்டம், அல்லது புனித தர்மம் என்று இந்தியாவில் மட்டுமல்ல உலகிலும் பல இடங்களிலும் அப்படித்தான் வரிந்து கொண்டுள்ளனர் என்று கூறிய  அம்பேத்கர், அந்தக் கல்லூரி உரையில் கூறும்போது, அனைத்துக் கேள்விகளுக்கான தீர்வையும் பெரும்பான்மையே தீர்மானிக்கும் என்பது நம் சட்டத்தில் இருப்பது உண்மையே. ஆனால் இந்தக் கொள்கையில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேன். இது நம்மிடம் உள்ள மிக அபாயகரமான கொள்கை. ஒரு வசதிக்காகவே பெரும்பான்மையினர் ஆளுகை என்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடவுளுக்காக கேட்டுக் கொள்கிறேன் இந்தக் கொள்கை மீது அதிகம் சவாரி செய்யாதீர்கள். இதனால் பெரிய கஷ்டங்களை ஏற்படுத்தி விடுவீர்கள். ஒரு குறிப்பிட்ட பொருளில் பெரும்பான்மை ஆளுகை என்பது தவறான ஒரு ஆளுகையே என்றார் அம்பேத்கர்.

மேலும், நம் அரசியல் சட்டத்தில்,  சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மையின் அதிகாரத்திற்கு நம் அரசியல் சட்டம் எல்லையை வரையறை செய்துள்ளது.  நாடாளுமன்ற ஜனநாயகம் தர்க்கபூர்வமாகவும் அறிவுறுத்தும் விதமாகவும் சிறுபான்மையினரை அவர்கள் நலம் சார்ந்து வெல்ல வேண்டுமே தவிர வேறு வழிகள் பயன்படாது என்கிறார் அம்பேத்கர்.

மேலும் சமூக அறம், அரசியல் சாசன அறம் என்ற இரண்டையுமே அம்பேத்கர் வலியுறுத்துகிறார். அரசியல் சாசன மதிப்பீடுகளாகிய சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்பதற்கு விரோதமாக எந்த ஒரு பிரிவினரும் நடந்து கொள்ள பணிக்கப்படக் கூடாது என்கிறார். அதாவது ஒரு பெரும்பான்மை ஆளுகை சிறுபான்மையினரின் உலகப்பார்வை, கருத்தியல் உலகத்தை பெரும்பான்மை உலகப்பார்வைக்குத் திரும்ப கட்டாயப்படுத்துவதோ, பெரும்பான்மை கொள்கைகளை வலுக்கட்டாயமாக கடைப்பிடிக்கச் சொல்வதோ, செய்வதோ தவறு என்கிறார் அம்பேத்கர். சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது என்பதுதான் நம் அரசியல் சாசனத்தின் ஆன்மா என்கிறார் அம்பேத்கர்.
Published by:Muthukumar
First published:

Tags: Ambedkar

அடுத்த செய்தி