அமரிந்தர் சிங் ராஜினாமா செய்வதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியிருக்கிறார்.
பஞ்சாப் முதல்வர் பதவியை கேப்டன் அமரிந்தர் சிங் நேற்று திடீரென ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக மாறியது. பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் அமரிந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் பல ஆண்டுகளாக உட்கட்சி மோதல் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.
கடந்த சில நாட்களாகவே கேப்டன் அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடியை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலர் கூட்டாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதாகவும், அதில் முதல்வராக அமரிந்தர் சிங் தொடர்ந்தால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது, ஆனால் அதற்கு முன்னரே ஆளுநர் மாளிகை சென்ற கேப்டன் அமரிந்தர் சிங், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
Also Read: ‘அவமதிக்கப்பட்டேன்’ – முதல்வர் பதவி விலகலுக்கு அமரீந்தர் சிங் சொன்ன காரணம்!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமரிந்தர் சிங், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக நேற்று காலை கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவித்தேன். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் 3வது முறையாக நடைபெறுகிறது. நான் மிகவும் அவமானப்படுத்தப்படுவதாக உணர்கிறேன். என உருக்கமாக பேசினார்.
இதன் பின்னர் மீண்டும் ஒரு முறை செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் அமரிந்தர் சிங், தான் பதவி விலகுவதாக கூறிய போது சோனியா காந்தி என்ன தெரிவித்தார் என்பதையும் விளக்கினார்.
சோனியாவிடம் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய போது, என்னை மன்னித்து விடுங்கள் அமரிந்தர் என சோனியா கூறியதாக தெரிவித்தார். மேலும் நான் 52 ஆண்டுகள் அரசியலில் இருந்துள்ளேன், ஒன்பதரை ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்துள்ளேன். கட்சி யாரை விரும்புகிறதோ அவர்கள் முதல்வர் ஆக்கப்படட்டும் என 79 வயதாகும் அமரிந்தர் கூறினார்.
Also Read: சென்னை வரும் சொகுசு சுற்றுலா கப்பல்.. சிறப்புகள் என்ன?
சோனியா காந்தியின் கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வரப்பட்டவர் அமரிந்தர் சிங். மேலும் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏற்கனவே ஒரு முறை விலகி ஷிரோமனி அகாலி தளம் கட்சியில் இணைந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமானார். ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ என்ற சீக்கியர்களுக்கு எதிரான நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து அமரிந்தர் விலகியது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amarinder Singh, Congress, Punjab